Categories: சினிமா

மொக்கை நாடகத்துக்குப் போய் மாட்டுகிட்ட கிரேஸி மோகன்… நைஸா நழுவலாம்னு எழுந்த நாகேஷ் அடித்த கமெண்ட்… கமல் பகிர்ந்த சம்பவம்!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.

அதன் பின்னர் தன்னுடைய மார்க்கெட் போனபோதும், குணச்சித்திர மற்றும் வில்லன் நடிப்புக்கு இறங்கிவந்தார். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு தன்னுடைய மரணம் வரை நடித்தார். கடைசியாக அவர் நடித்த படம் கமல்ஹாசனின் தசாவதாரம் படம்தான். தமிழ் சினிமாவில் கமல், அளவுக்கு நாகேஷின் வெறித்தனமான ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது.

கமலின் படங்களில் மட்டும் நாகேஷின் கதாபாத்திரமும், அவரின் நடிப்பும் ஏதோவொரு தனித்துவத்தோடு இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கமல, நாகேஷின் நகைச்சுவை உணர்வு குறித்து பேசிய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

அதில் “கிரேஸி மோகனும், நாகேஷும் ஒரு மோசமான நாடகத்துக்கு போய் மாட்டிக் கொண்டுள்ளார்கள். சரி எப்படியாவது நழுவி விடலாம் வெற்றிலை எச்சில் துப்ப செல்வது போல எழுந்துள்ளார். அப்போது அவரின் கையைப் பிடித்த நாகேஷ் ‘எங்கே போகிறாய்’ எனக் கேட்டுள்ளார். அதற்கு சைகையிலேயே வெற்றிலை எச்சில் துப்பிவிட்டு வருகிறேன் என கிரேஸி மோகன் கூறியுள்ளார்.

அதற்கு நாகேஷோ ‘ஏன் வெளியே போய் துப்புற. இங்கயே ஸ்டேஜ பாத்து துப்பு’ என சொல்லியுள்ளார். இதை என்னிடம் சொல்லி சொல்லி சிரித்தார் கிரேஸி மோகன்” என அதில் பகிர்ந்துள்ளார்.

vinoth

Recent Posts

“ஏசி-யில் தூங்கிவிட்டு காலையில் தலைவலியோடு எழுகிறீர்களா?… காரணம் இதுதான்.. இனிமேல் இதை மட்டும் செய்யாதீங்க”… அதிர வைக்கும் உண்மைகள்…!!!

தற்காலச் சூழலில் ஏசி (Air Conditioner) என்பது ஆடம்பரப் பொருள் என்ற நிலையிலிருந்து மாறி அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பிப்ரவரி மாதத்திலிருந்தே…

40 seconds ago

விஜய்க்கு விழுந்த பலத்த அடி… ஸ்டாலினுக்கு ‘டாட்டா’ காட்டிய பி.டி. செல்வகுமார்… அதிமுக வேட்பாளருக்காக களமிறங்கியது ஏன்..?

தமிழகத் திரையுலகில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளராகவும், 'புலி' படத்தின் தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் பி.டி. செல்வகுமார். விஜய்யுடன் 'கோயமுத்தூர் மாப்பிள்ளை'…

50 seconds ago

குறைந்த செலவில் ஒரு பாதுகாப்பான வழி… கொசுக்கடியிலிருந்து தப்பிக்க செக்யூரிட்டி கார்டின் மாஸ்டர் பிளான்… வைரலாகும் ‘பிளாஸ்டிக் கவசம்’ வீடியோ..!!

கொசுக்களிடம் இருந்து தப்பிக்க ஒரு செக்யூரிட்டி கார்டு செய்த நூதனமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக திறந்தவெளியில்…

2 minutes ago

“உங்க ஊருக்கே பவர் இல்ல.. இதுல காஷ்மீர் கேக்குதா?.. முதல்ல லைட்ட போடுங்கப்பா”… பாகிஸ்தானை விளாசும் இந்திய நெட்டிசன்கள்… ஈரான் போரால் வந்த விபரீதம்….!

ஈரான் போரின் தாக்கம் உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து…

5 minutes ago

“ஒரே ஒரு ரூபாய்.. 50 வருஷ அரசியல்”… “லஞ்சம் வாங்கினேன்னு நிரூபிச்சா இங்கேயே செத்துருவேன்”… காட்பாடியில் கதறிய துரைமுருகன்…!

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர…

9 minutes ago

அதிர்ஷ்ட கதவு திறந்தது!… உச்ச வீட்டில் சூரிய பகவான்… அடுத்த 30 நாட்களுக்கு இந்த 6 ராசிகளுக்கு பணமழை பொழியப்போகுது… உங்கள் ராசி இருக்கா?

சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…

11 minutes ago