“ஒரே ஒரு ரூபாய்.. 50 வருஷ அரசியல்”… “லஞ்சம் வாங்கினேன்னு நிரூபிச்சா இங்கேயே செத்துருவேன்”… காட்பாடியில் கதறிய துரைமுருகன்…!

Spread the love

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்குப் பொதுமக்கள் சார்பில் சிலம்பாட்டம், சுருள்வாள் வீச்சு, மேளதாளங்கள் மற்றும் பொம்மை நடனங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பரப்புரையின் போது உணர்ச்சிவசப்பட்ட துரைமுருகன், தனது அரசியல் பயணத்தில் நேர்மையையும் ஒழுக்கத்தையும் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை எனச் சூளுரைத்தார்.

மேடையில் பேசிய அவர், “கடந்த 40 முதல் 50 ஆண்டுகால எனது அரசியல் வாழ்க்கையில், யாரிடமாவது ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினேன் என்று யாராவது நிரூபித்தால், இங்கேயே நெருப்பில் குதித்து உயிரை விடுவேன்” என்று சவால் விடுத்தார். மேலும், பெண்கள் விஷயத்தில் தான் ஒருபோதும் தவறாக நடந்துகொண்டதில்லை என்றும், அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் தான் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்ளத் தயார் என்றும் உருக்கமாகத் தெரிவித்தார். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்களிடம் பயமும், ஒழுக்கமும் மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய துரைமுருகன், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் விரிவுபடுத்தப்படும் என்று உறுதி அளித்தார். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், குடும்பப் பயன்பாட்டுக்காக 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்றும், அதனைக் கொண்டு மின்சாதன அடுப்புகளை மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

தொகுதி மேம்பாடு குறித்துப் பேசுகையில், திருவள்ளுவர் நகரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகவும், தேர்தல் முடிந்தவுடன் அது மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும் என்றும் கூறினார். “மக்களுக்குப் பயந்து தொண்டு செய்தால் மட்டுமே அவர்கள் நம்மை வாழ்த்துவார்கள்” என்று குறிப்பிட்ட அவர், இத்தனை ஆண்டுகள் தான் செய்த பணிகளுக்காக மீண்டும் தனக்கு ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Nanthini

Recent Posts

விஜய் அமைச்சரவையின் 3-வது விக்கெட்?… லோதா கமிட்டி தீர்ப்பை தூக்கிய அதிமுக… சிக்கலில் ஆதவ் அர்ஜுனா… வெடித்த புதிய சர்ச்சை…!

விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா, ஒரே நேரத்தில் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் (BFI) தலைவராகவும் நீடிப்பது…

1 minute ago

பிரார்த்தனை செய்யப்போன இடத்தில் காத்திருந்த யமன்.. மரத்தில் மோதிய கார்… துடிதுடித்த குடும்பம்… நொடிப்பொழுதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், சாதி, மத, மொழி பேதங்களைக் கடந்து…

9 minutes ago

“அதிமுகவில் வெடித்த ஜாதி அரசியல் சண்டை”… வேலுமணிக்கு கல்தா கொடுக்க ஸ்கெட்ச் போட்ட கே.பி.முனுசாமி… அடுத்த பரபரப்பு…!

அதிமுகவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோருக்கு…

17 minutes ago

“உனக்கு எல்லாமே செஞ்சேனே”.. கோவில் வாசலில் காதலனுடன் நின்ற மகளின் காலில் விழுந்து அழுத தந்தை.. கலங்கும் இணையதளம்..!!

காதலனைத் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, கோவிலில் திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் ஒரு மகள். சரியாக அந்த…

17 minutes ago

“நான் பார்த்துக்குறேன் நண்பா”… துயரத்திலும் நெகிழ வைத்த நட்பு… அஜித்தின் கார் பயணத்தின் போது விஜய் கொடுத்த அந்த உருக்கமான வாக்குறுதி…!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமாரின் தாயார் அண்மையில் இயற்கை எய்தினார். இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்தத்…

23 minutes ago

ஒரு இரவுக்கு 35 லட்சமா?.. அண்டை வீட்டுப் பெண் கொடுத்த ஆபரேஷன்.. மனைவியையே விலை பேசிய கணவன்.. நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்த சம்பவம்..!!

மஞ்சள் நிற மேலாடை அணிந்திருந்த ரீமா, தனது அண்டை வீடான அமித்தின் வீட்டிற்குச் சென்று அந்த அதிர்ச்சியூட்டும் கோரிக்கையை வைத்தபோது,…

24 minutes ago