“உங்க ஊருக்கே பவர் இல்ல.. இதுல காஷ்மீர் கேக்குதா?.. முதல்ல லைட்ட போடுங்கப்பா”… பாகிஸ்தானை விளாசும் இந்திய நெட்டிசன்கள்… ஈரான் போரால் வந்த விபரீதம்….!

Spread the love

ஈரான் போரின் தாக்கம் உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. எரிசக்தி செலவுகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், நிலைமையைச் சமாளிக்க அந்நாட்டு அரசு தினமும் இரண்டு மணி நேரத் திட்டமிட்ட மின்வெட்டை அறிவித்துள்ளது. ஏற்கனவே பலவீனமான பொருளாதாரச் சூழலில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு, சர்வதேசப் போர்ச் சூழல் கூடுதல் சுமையாக மாறியுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது.

இந்த மின்வெட்டுத் திட்டம் குறிப்பாக மின் நுகர்வு அதிகமாக இருக்கும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை அமல்படுத்தப்பட உள்ளது. நீர்மின் உற்பத்தி சரிந்துள்ள நிலையில், ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளதே இந்தத் தீவிர முடிவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தானின் கிராமப்புறங்களில் ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக ‘டைம் பிக்ஸ்’ செய்து மின்சாரத்தை நிறுத்துவது அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து விமர்சனங்கள் அனல் பறக்கின்றன. குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் மல்லுக்கட்டத் துடிக்கும் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையை இந்திய நெட்டிசன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். “சொந்த நாட்டில் அடிப்படைத் தேவையான மின்சாரத்தைக் கூட வழங்க முடியாத நிலையில், இன்னும் காஷ்மீர் கனவு எதற்கு?” என்றும், “உங்க ஊருலேயே நெருக்கடியைச் சமாளிக்க முடியல.. இதுல காஷ்மீர் கேக்குதா?” என்றும் கிண்டலான பதிவுகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

எரிசக்தி கட்டணங்களைச் செலுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான், சில நகரங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துவிட்டு மற்ற பகுதிகளில் மின்வெட்டை அமல்படுத்துவது பாரபட்சமானது என்ற கருத்தும் எழுந்துள்ளது. பொருளாதார நெருக்கடியும், போர்க்கால சூழலும் ஒரு சேர அழுத்துவதால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயுள்ளது. எல்லைப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, நாட்டின் உட்கட்டமைப்பையும் பொருளாதாரத்தையும் சீரமைப்பதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தற்போதைய பொதுவான விமர்சனமாக இருக்கிறது.

Nanthini

Recent Posts

“ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் கள்ள காதல்”… 2016-ல் கணவனுக்கு நேர்ந்த அதே கதி… 2026-ல் கள்ளக்காதலியின் உடலை எரித்த காதலன்… பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில்,…

4 minutes ago

கண்ணீர் விட்டு கதறி உயிரை விட்ட அதிமுக நிர்வாகி… பதறியடித்து ஓடிவந்த எடப்பாடி பழனிசாமி… கலங்க வைக்கும் வீடியோ…!

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன…

10 minutes ago

“கோடிகளை கொட்டி பதவி வாங்கினாங்க”… ஸ்டாலின் – எடப்பாடி ரகசிய கூட்டணி?.. உடைத்து நொறுக்கிய தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்…!

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…

15 minutes ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. 1800 பள்ளிகளில் இது இல்லையா?… சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்….!

தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கல்வித்துறையின் தற்போதைய அவலநிலை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

19 minutes ago

இது என்னப்பா புதுசா இருக்கு?… தனுஷ் அடுத்த முதலமைச்சரா?… ப்ளூ சட்டை மாறனின் ஒற்றை ட்வீட்டால் கோலிவுட்டில் வெடித்த அரசியல் பூகம்பம்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பதும், அதுகுறித்த விவாதங்கள் எழுவதும் காலம் காலமாக தொடரும் ஒரு வழக்கமான…

24 minutes ago

அமித் ஷா விடுத்த அவசர அழைப்பு… டெல்லி பறக்கும் அண்ணாமலை… தமிழக அரசியலில் வெடிக்கப் போகும் அடுத்த அணுகுண்டு….!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மீண்டும் அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று…

30 minutes ago