விஜய் அமைச்சரவையின் 3-வது விக்கெட்?… லோதா கமிட்டி தீர்ப்பை தூக்கிய அதிமுக… சிக்கலில் ஆதவ் அர்ஜுனா… வெடித்த புதிய சர்ச்சை…!

Spread the love

விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா, ஒரே நேரத்தில் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் (BFI) தலைவராகவும் நீடிப்பது ‘நலன் முரண்பாடு’ (Conflict of Interest) என்ற கடுமையான விவாதத்தை தமிழக அரசியலில் கிளப்பியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக, சீனியாரிட்டி அடிப்படையில் 3-வது முக்கிய இடத்தில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா மீது அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான இன்பதுரை இந்த விவகாரத்தை முன்வைத்து மீண்டும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

முன்னதாக, ஒரே நேரத்தில் இரு பதவிகளில் நீடிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அப்படி எந்த விதிமுறையும் இல்லை; அதிமுகவினருக்கு விளையாட்டும் தெரியாது, அரசியலும் தெரியாது” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டியுள்ள இன்பதுரை, 2015-ல் ‘BCCI v. Cricket Association of Bihar’ வழக்கில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா குழுவின் அறிக்கையை முன்வைத்துள்ளார். அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் விளையாட்டுச் சங்கங்களில் பதவி வகிக்கக் கூடாது என்ற லோதா குழுவின் முதன்மைப் பரிந்துரையை உச்ச நீதிமன்றமும் ஏற்றுத் தீர்ப்பளித்துள்ளதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

“விதிகள் ஏதும் இல்லை” என்று கூறும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறியாமையைத் தீர்க்க, தமிழக அரசு அதிகாரிகள் அவருக்கு இந்தச் சட்ட விதிகளையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று இன்பதுரை வலியுறுத்தியுள்ளார். விளையாட்டுத் துறைக்கு அமைச்சரே தலைவராகவும், அவரே ஒரு விளையாட்டுச் சங்கத்தின் தலைவராகவும் இருப்பது வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் என்றும், இது விளையாட்டு உலகிற்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “அதிமுகவுக்கு விளையாட்டு தெரியாது” என்ற அமைச்சரின் விமர்சனத்திற்குப் பதிலடியாக அதிமுகவின் வரலாற்றுச் சாதனைகளையும் இன்பதுரை பட்டியலிட்டுள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) 1992-ல் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டதையும், 1995 SAF விளையாட்டுகளுக்காக நேரு உள்விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல் வளாகம் போன்ற உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத அரசு வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டையும் சுட்டிக்காட்டி, “விளையாட்டு அரசியல்” செய்யும் அமைச்சருக்கு அதிகாரிகள் உண்மை நிலையைப் புரிய வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் கள்ள காதல்”… 2016-ல் கணவனுக்கு நேர்ந்த அதே கதி… 2026-ல் கள்ளக்காதலியின் உடலை எரித்த காதலன்… பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில்,…

4 minutes ago

கண்ணீர் விட்டு கதறி உயிரை விட்ட அதிமுக நிர்வாகி… பதறியடித்து ஓடிவந்த எடப்பாடி பழனிசாமி… கலங்க வைக்கும் வீடியோ…!

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன…

10 minutes ago

“கோடிகளை கொட்டி பதவி வாங்கினாங்க”… ஸ்டாலின் – எடப்பாடி ரகசிய கூட்டணி?.. உடைத்து நொறுக்கிய தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்…!

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…

15 minutes ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. 1800 பள்ளிகளில் இது இல்லையா?… சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்….!

தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கல்வித்துறையின் தற்போதைய அவலநிலை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

20 minutes ago

இது என்னப்பா புதுசா இருக்கு?… தனுஷ் அடுத்த முதலமைச்சரா?… ப்ளூ சட்டை மாறனின் ஒற்றை ட்வீட்டால் கோலிவுட்டில் வெடித்த அரசியல் பூகம்பம்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பதும், அதுகுறித்த விவாதங்கள் எழுவதும் காலம் காலமாக தொடரும் ஒரு வழக்கமான…

25 minutes ago

அமித் ஷா விடுத்த அவசர அழைப்பு… டெல்லி பறக்கும் அண்ணாமலை… தமிழக அரசியலில் வெடிக்கப் போகும் அடுத்த அணுகுண்டு….!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மீண்டும் அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று…

31 minutes ago