வருடாவருடம் காஸ்டியூம் டிசைனருடன் அமெரிக்கா செல்லும் கமல்.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா..?

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். தற்பொழுது இவர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2 ‘ படத்தில் நடித்தில் முடித்துள்ளார். தொடர்ந்து, பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி படத்திலும் ஹெச்.வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார்.

   

கமல்ஹாசன் அணிந்து வரும் ஆடைகளுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை வார இறுதி நாட்களில் கமல் வந்து மேடையில் பேசும் போது, அவர் அணிந்திருக்கும் ஸ்டைலான உடைகள் தான் பார்வையாளர்களை அதிகம் கவரும். ஸ்டைலான ஆடைகள் இத்தனை வயதிலும் இவ்வளவு யங்காக இருக்கிறாரே என கமலை பார்த்து நாம் பொறாமைப்பட காரணமாக அமைந்தது, அவரது உடைகள் தான்.

கமலை இத்தனை ஸ்டைலாக காட்டுவது யார் தெரியுமா..? ஆடை வடிவமைப்பாளர் அம்ரிதா ராம் அவர்கள் தான்.இவர் நியூயார்க்கில் உள்ள பேஷன் டெக்னாலஜி கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். இவரை சினிமாவில் முதலில் அறிமுகப்படுத்தியது மிஸ்கின் தான். முகமூடி படத்திற்காக இவர் வடிவமைத்த உடைகள் பெரிதாக பேசப்பட்டன.

இதையடுத்து, ரஜினியின் கபாலி, தனுஷின் வடசென்னை, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் அம்ரிதா பணிபுரிந்திருக்கிறார். கமலுடன் இவர் முதலில் வேலை செய்தது, விஸ்வரூபம் படத்தில் தான். அம்ரிதாவின் திறமையை கண்டு வியந்த கமல், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் அவரையே ஆடை வடிவமைப்பாளராக்கிவிட்டார். இதைத்தொடர்ந்து ‘இந்தியன் 2’ விலும் அவரே ஆடை வடிவமைப்பாளராக செயல்பட்டார்.

தற்போது நடிகர் கமலஹாசன்  காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வரும் அமிர்தா ராமுடன் கூட்டணி வைத்து அமெரிக்காவில் ‘கே எச் ஹவுஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரில் கதர் ஆடை பிசினஸ் செய்து வருகிறாராம். இதற்காகத்தான் வருடா வருடம் அவர் அமெரிக்காவிற்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.