சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் ராஜகுமாரன் கூறியதாவது, மக்கள் நீதி மய்யம் சார்பில் தேவயானியை அந்தியூர் தொகுதியில் தேர்தலில் நிறுத்துவதற்கு அந்த கட்சி முயற்சி செய்தது. ஆனால் எனக்கு அரசியல் தெரியும் என்பதால் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. தேர்தலில் நின்று வெல்வதை விடவும் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக வெல்ல வேண்டும். அப்போதுதான் தொகுதியில் மக்களுக்கான நல்ல விஷயங்களை வளர்ச்சி பணிகளை செய்ய முடியும். நாங்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. அந்த கட்சி சார்பில் எங்களிடம் பேச்சு நடத்த முயற்சி செய்தார்கள்.
ஒரு முறை அந்தியூரில் வைத்து எங்களை கமல்ஹாசன் நேரில் சந்திக்க வருவதாகவும், உங்கள் வீட்டில் தான் கமல் உணவு அருந்தப் போகிறார் என்றும் தகவல் சொன்னார்கள். ஆனால் நாங்களோ, இல்லை சார். சென்னைக்கு கிளம்பிட்டோம். சாவியை கொடுத்துவிட்டு நாங்கள் போகிறோம். கமல் சார் இங்கு வந்தால் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தோம். அரசியல் நிமித்தமாக அவர் எங்களை சந்திப்பதை நாங்கள் விரும்பவில்லை என்று இயக்குனர் ராஜகுமாரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…