விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

Spread the love

தமிழகம் முழுவதும் இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தொடங்கி உள்ளது. இதில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் உட்பட அரசின் பல்வேறு சேவைகளையும் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழக முழுவதும் ஜூலை 15 இன்று தொடங்கி வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி வரை இந்த முகாம்கள் நடைபெற உள்ளது. ஊரகப்பகுதிகளில் இந்த முகாம்கள் மூலமாக 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. மொத்தம் நான்கு கட்டங்களாக 10,000 முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் அரசு சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்குச் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை.

ஏனென்றால் அனைத்து துறை அதிகாரிகளுமே இந்த முகாம்களில் இருப்பார்கள் என்பதால் பெரும்பாலான சேவைகளை மக்கள் இதில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்ட பெண்களும் இந்த திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  மேலும் இந்த முகாம்களில் அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இப்படியான நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் இன்று முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் விண்ணப்பங்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

6 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

7 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

7 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

7 மணத்தியாலங்கள் ago