
NEWS
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க…!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பொறியியல், பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோயம்புத்தூர், விழுப்புரம், நாகர்கோவில், எஸ்.இ.டி.சி சென்னை, சேலம், எம்.டி.சி சென்னை, திருநெல்வேலி, தர்மபுரி ஆகிய மண்டலங்களில் மொத்தம் 417 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் வருகிற 10.10.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பொறியியல் பட்டதாரி பயிற்சி:
காலியிடங்கள் எண்ணிக்கை-150
கல்வித் தகுதி- மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பிரிவில் பொறியியல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை-ரூ.9,000
பட்டய பயிற்சி:
காலியிடங்கள் எண்ணிக்கை-185
கல்வித் தகுதி- மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பிரிவில் டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
ஊக்க தொகை- ரூ.8,000
பட்டதாரி பயிற்சி:
காலி பணியிடங்கள்-82
கல்வி தகுதி-பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.பி ஏ, பி.சி.ஏ படித்திருக்க வேண்டும்.
ஊக்க தொகை-ரூ.9000
பயிற்சி கால அளவு ஒரு வருடம். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு ஆண்டு காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படும். முதலில் http://boat.com/tnstc2023/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2023/09/TNSTC_2023_24_8_Regions_Notification.pdf என்ற இணையதள பக்கத்தினை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.