Categories: சினிமா

அந்த படத்துக்கு ஹீரோவ சீட்டுக் குலுக்கி போட்டு செலக்ட் பண்ணாங்க… ஹிட் படத்தை மிஸ் பண்ணிய சீக்ரெட்டைப் பகிர்ந்த ஜீவா!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர் பி சௌத்ரியின் இளைய மகன் ஜீவா. இவர் அவர் தந்தை தயாரித்த ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலமாக நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் வரிசையாக பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து  டிஷ்யூம், பொறி, கோ, நண்பன் என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் இடையில் ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்த ஜீவா திடீரென சில தவறான படங்களை தேர்வு செய்து நடித்ததால் மார்க்கெட்டை இழந்தார். இப்போது அவர் கைவசம் பெரிதாகப் படங்கள் இல்லை. சமீபத்தில் ப்ளாக் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். இதையடுத்து கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜீவா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் சுவாரஸ்யமானத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “பாஸ் என்கிற பாஸ்கரன் படம் கூட நான் நடிக்க வேண்டிய படம்தான். முதலில் அந்த கதை எனக்கு வந்தது. நான் பண்ணலாம் என்று சொன்னபோதே அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் சீட்டுக்குலுக்கி போட்டு ஆர்யாவைத் தேர்வு செய்துள்ளனர். அடப்பாவிகளா ரெண்டு சீட்டிலும் என் பேரையே எழுதிப் போட்டிருக்கக் கூடாதா என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் அந்த படம் ஆர்யாவுக்கு ஒரு வித்தியாசமான பாதையை செட் பண்ணியது. அதற்கு முன்னர் அவர் அந்த மாதிரி படங்களில் எல்லாம் நடிக்கவில்லை. ஆர்யா சந்தானம் கூட்டணி நல்ல வரவேற்பைப் பெற்றது. நானும் அந்த படத்தின் க்ளைமேக்ஸில் ஒரு ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

5 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

5 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

5 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

5 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

5 மணத்தியாலங்கள் ago