பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கான் சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக செய்தி வெளியானது. அந்தச் செய்தியை அமீர் கானும் உறுதிப்படுத்து இருந்தார். இன்று அமீர்கான் தனது அறுபதாவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடினார். அது மட்டும் அல்லாமல் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய பாலிவுட் நண்பர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோரை அமீர்கான் தன்னுடைய வீட்டிற்கு அழைத்திருந்தார். பிரம்மாண்டமாக வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. இதனிடையே அவர்கள் இரண்டு பேரையும் அமீர் கான் தன்னுடைய வீட்டிற்கு அழைத்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
அதாவது தன்னுடைய புதிய காதலி கௌரியை பாலிவுட் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காக ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் அமீர் கான் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இதனை அமீர்கான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், நானும் கௌரவம் 25 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக சந்தித்துக் கொண்டோம். தற்போது நாங்கள் வாழ்க்கை துணையாகிறோம். எங்களுடைய உறவில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கௌரியை என்னுடைய நண்பர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான்கானுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
கௌரி தற்போது தயாரிப்பு பிரிவில் இருக்கின்றார். எனது 60 வயதில் திருமணம் மகிழ்ச்சியை கொடுக்குமா என எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னுடைய குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனது முன்னாள் மனைவிகளுடன் சிறந்த உறவுகளைப் பெற்று இருப்பது எனக்கு மிகவும் அதிர்ஷ்டம். கௌரி ஒரு சில படங்களை மட்டுமே இதுவரை பார்த்து உள்ளார். எங்களுடைய உறவால் எங்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக உள்ளனர். கௌரி ஆறு வயது மகனுக்கு தாய் ஆவார். அது மட்டுமல்லாமல் அவர் பாதி தமிழ், பாதி ஐரிஸ் இனத்தை சேர்ந்தவர். கௌரியின் தாத்தா சுதந்திரப் போராட்ட வீரர் என அமீர் கான் தெரிவித்துள்ளார். அமீர்கான் முதன்முதலில் ரீனா தத்தா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 16 ஆண்டுகள் கழித்து 2002 ஆண்டு விவாகரத்து பெற்றார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் விவாகரத்திற்கு பிறகும் தனது மனைவியுடன் நல்ல நட்பில் இருக்கிறார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை அமீர்கான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்த தம்பதிகளுக்கு ஆஷாத் என்ற மகன் உள்ளார். இரண்டு காதல் திருமணமும் திருப்தி அளிக்காத நிலையில் தற்போது மூன்றாவது காதலியை அமீர் கான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…