Categories: சினிமா

நமக்கு இந்த கலை, கதாபாத்திரமாவே மாறிடறது எல்லாம் இல்ல.. இதுக்காகதான் நடிக்கிறேன் – சக நடிகரிடம் ஓப்பனாகப் பேசிய சூப்பர் ஸ்டார்!

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் மாஸ் மகாராஜாவாக இருக்கிறார். தற்போது தன்னுடைய 73 வயதிலும் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக களத்தில் நிற்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரின் அடுத்த படமான ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ வெளியானது. அதில் சில ஷாட்களில் நடித்திருப்பது ரஜினியே இல்லை என்றும் டூப் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த கிள்ம்ப்ஸ் வீடியோவின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், அதில் ரஜினிகாந்த் நடித்துள்ளதை உறுதி செய்தது.

ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் முள்ளும் மலரும், ஜானி, புவனா ஒரு கேள்விக்குறி, ஜானி, ஆறிலிருந்து அறுபது வரை போன்ற நல்லக் கதையம்சம் உள்ள படங்களில், அந்த கதைக்குத் தேவையான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ஆன பின்னர் அவர் நடித்தது எல்லாம் கதாநாயக அம்சமுள்ள மாஸ் ஹீரோ வேடம்தான். அதனால் ரஜினி என்ற நல்ல நடிகரை நாம் இழந்துவிட்டதாக இப்போதும் விமர்சனங்கள் உள்ளன.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினிகாந்த், மறைந்த நடிகர் விவேக்குக்கு அளித்த ஒரு நேர்காணலில் தான் நடிக்கும் வேடங்கள் குறித்துப் பேசியுள்ளார். அதில் ”எனக்கு இந்த கலைக்காக நடிக்கிறேன், என்னை மறந்து கதாபாத்திரமாவே மாறிடுறேன் என்பதெல்லாம் இல்லை. நான் காசுக்காக நடிக்கிறேன், ரசிகர்களுக்காக நடிக்கிறேன் அவ்வளவுதான்” என ஓப்பனாகப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

4 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

4 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

4 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

4 மணத்தியாலங்கள் ago