நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். ஈழத்தமிழர் இன படுகொலைக்கு திமுக தலைவர் கருணாநிதி ஆதரவாக இருந்ததாக கூறியதோடு திமுக என்னுடைய வாழ்நாள் எதிரி என்று பல மேடைகளில் அவர் பேசியுள்ளார். இருந்தாலும் தற்போது சீமானின் அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் அதிலும் குறிப்பாக திமுகவுக்கு மறைமுகமான ஆதரவு நாம் தமிழர் கட்சியில் உள்ள ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் மற்றும் தமிழ் தேசியவாதிகள் கட்சியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் சீமான் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு சீமானின் பேச்சுகள் திமுக விமர்சனத்தை குறைத்து திமுகவை மாயை என்று மட்டுமே விமர்சிக்க தொடங்கினார். அது மட்டுமல்லாமல் ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் திமுக ஆதரவாக மாறிவிட்டார் சீமான் என்று கூறி வருகிறார்கள். ஈழத்தை மீட்பேன் என்று கூறிய சீமான் தற்போது திமுகவுடன் சேர்ந்து விஜய் எதிர்ப்பு அரசியல் செய்கின்றார் என்ற விமர்சனங்களும் உள்ளது. சீமான் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தாலும் அவருடைய பேச்சுகள் திமுகவுக்கு மறைமுக ஆதரவாக தெரிகிறது.
இதன் காரணமாக பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி வருகிறார்கள். கட்சியில் ஏராளமானோர் சீமான் மீது விரக்தியில் இருப்பதால் கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். இளைஞர்கள் மத்தியில் சீமான் மீதான நம்பிக்கை முற்றிலுமாக தகர்க்கப்பட்டு விட்டது. கட்சி வலுவடையும் நேரத்தில் சீமான் இப்படி பேசி இருக்கக் கூடாது என்றும் பலரும் கூறி வருகிறார்கள்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…