40 ஆண்டுகால முந்தானை முடிச்சு அவிழ்ந்தது… அன்று ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் மலர்ந்த காதல்… இன்று கணவரை இழந்து தவிக்கும் சோகப் பின்னணி…!

Spread the love

தமிழ் திரையுலகில் அசாத்தியமான கதை சொல்லும் முறையாலும், எளிய மனிதர்களின் சாதாரண வாழ்க்கையைச் சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றுவதிலும் வல்லவரான ‘திரைக்கதை மன்னன்’ கே.பாக்யராஜ், தனது 73-வது வயதில் மாரடைப்பு காரணமாகச் சிகிச்சை பலனின்றி காலமானார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பாசறையில் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் தனது பயணத்தைத் தொடங்கி, பின்னாளில் தமிழ் சினிமாவின் முடிசூடா தளபதியாக உயர்ந்தவர் அவர். இவரது இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

அவரது நிஜ வாழ்க்கைத் திரைக்கதையில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது நடிகை பூர்ணிமாவுடனான காதல் தான். கடந்த 1982-ல் கே. பாக்யராஜ் இயக்கி, நாயகனாக நடித்த ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் மலர்ந்த இவர்களது நட்பு, நாளடைவில் ஆழமான காதலாக மாறியது. தொடர்ந்து 1984 பிப்ரவரி 7 அன்று திரையுலகினர் முன்னிலையில் இவர்களது காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு பூர்ணிமா தனது உச்சகட்ட சினிமா மார்க்கெட்டைத் துறந்து, முழுமையாகப் பாக்யராஜின் நிழலாக மாறி குடும்பப் பொறுப்பைக் கவனித்துக் கொண்டார்.

கடந்த 40 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையில், தமிழ் திரையுலகின் எந்தவொரு பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் இருவரும் கைகளைப் பிடித்துக்கொண்டு நிழல் போல இணைந்தே வருவது இவர்களது தனித்துவமான பழக்கமாகும். சமீபத்தில் கூட கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் இருவரும் ஜோடியாக, கை கோர்த்தபடி மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். அதுவே அவர்கள் இருவரும் இணைந்து பொதுவெளியில் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சியாக மாறும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. 40 வருடங்களாகத் தன் மூச்சாகக் கூடவே இருந்த கணவர் பாக்யராஜை இழந்து தவிக்கும் பூர்ணிமாவைத் தேற்ற வார்த்தைகளின்றி ஒட்டுமொத்தக் கோலிவுட்டும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Visaka

Recent Posts

அலட்சியத்தால் ஒரு உயிரே போச்சே..! காதில் ப்ளூடூத் இயர்போன்… கையில் மொபைல் போன்.. அலட்சியமாக ஊசி போட்ட செவிலியர்… துடிதுடித்து உயிரிழந்த நோயாளி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் (BMC), செவிலியரின் கவனக்குறைவால் நோயாளி ஒருவர் பரிதாபமாக…

1 minute ago

“பூவைச் செடியில் இருந்து கிள்ளினால் மட்டும் வாடாது”பாக்யராஜை அந்த வார்த்தை சொல்லி… மேடையில் பாரதிராஜா கலங்கிய நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது குருவான புகழ்பெற்ற…

13 minutes ago

“பெண் பிள்ளைகளைப் பெக்காதீங்க…” வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு DNA டெஸ்ட் கேட்ட கணவன்… கொடுமை தாங்காமல் கர்ப்பிணி தற்கொலை… வேதனையில் கதறும் தாய்..!!

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் அல்லாதுர்க்கைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும், சுஷ்மிதா என்பவருக்கும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

21 minutes ago

அடக்கடவுளே..! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி: பைக்கில் சென்றவர் மீது திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை… உயிருக்கு போராடும் அவலம்..!!

பெங்களூருவின் ராஜாஜிநகர் ராம் மந்திர் சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 53 வயது நபர் மீது காய்ந்த…

26 minutes ago