இறந்த தன் பாசமிகுந்த மகள் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட இளையராஜா.. இப்டி சுக்குநூறா ஒடஞ்சிட்டாரே….

By Mahalakshmi

Published on:

திரைப்பட பின்னணி பாடகி மற்றும் இளையராஜாவின் அன்பு மகளான பவதாரணி மறைந்த செய்தி  திரையுலகினர் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. இசைஞானி இளையராஜாவிற்கு திரை உலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கனத்த இதயத்துடன்  அன்பு மகளே என்ற போஸ்டை பகிர்ந்துள்ளார்.

Bhavadharani

   

திரைப்பட பின்னணி பாடகியான பவதாரணி கடந்த ஐந்து மாத காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் உள்ள கொழும்பூர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சுமார் 5 மாத கால ஆயுர்வேத சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இவரின் மறைந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளானார்கள்.

பாடகி பவதாரணி தனது வித்தியாசமான குரல் மூலம் பல வெற்றி பாடல்களை பாடி திரை உலகினர் மத்தியில் தனக்கொரு தனி அடையாளத்தை பதித்துள்ளார். இவர் பாரதி திரைப்படத்தில் “மயில் போல பொண்ணு ஒன்னு” பாடல் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். மேலும் அழகி படத்தில் இவர் பாடிய “ஒளியிலே தெரிவது தேவதையா” பாடல் படுகிட்டான நிலையில் மேலும் பிரபலமடைந்தார்.

தற்போது இளையராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்பு மகளே என்று பவதாரணியின் சிறு வயது புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த இளையராஜாவின் ரசிகர்கள் மிகுந்த கவலையுடன் தனது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi