“ஈரான் – அமெரிக்கா போர்… நிலைகுலைந்தபாகிஸ்தான்.. இப்படி ஒரு அடியை கனவிலும் நினைக்கல!… பெட்ரோல் விலையைக் கேட்டு உலகமே அதிர்ச்சி”…!!!

Spread the love

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ஈரானின் போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து போர் நிறுத்தத்திற்கு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டலை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. எதிர்காலத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்ற உறுதியான உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ஈரான் கறாராகக் கூறிவிட்டதால், போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.

இந்த போர்ச் சூழலால் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முயன்றாலும், தற்போதைய நிலைமை அந்த நாட்டுக்கே பாதகமாக முடிந்துள்ளது. குறிப்பாக, ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் இருந்து பாகிஸ்தானுக்கு வரும் கச்சா எண்ணெய் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலைவாசி விண்ணைத் தொட்டுள்ளது.

பாகிஸ்தான் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல் பாகிஸ்தான் கரன்சியில் 458.4 ரூபாய்க்கும் (இந்திய மதிப்பில் ₹152.6), டீசல் 520.35 ரூபாய்க்கும் (இந்திய மதிப்பில் ₹173.23) விற்பனை செய்யப்படுவதாக அந்நாட்டு பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக் அறிவித்துள்ளார். மண்ணெண்ணெய் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே பொருளாதாரச் சரிவில் இருந்த பாகிஸ்தான் மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமை ஏற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிடம் வாங்கிய பல்லாயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு, இந்தப் போர் பெரும் இடியாக இறங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தாலும், போர்ச் சூழல் காரணமாக விநியோகச் சங்கிலி முறிந்துள்ளது. இது பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தியையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் முடக்கியுள்ள நிலையில், இந்தப் போர் நீடித்தால் பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Muthu Mani

Recent Posts

“அடேங்கப்பா… 10,000 கேமராக்களுடன் களமிறங்கிய அஸ்வினி பிடே – மும்பையை நடுங்க வைக்கும் ரெட் அலர்ட்… பதறவைக்கும் LIVE காட்சிகள்…!!”

மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…

6 minutes ago

“அட கடவுளே… மரண பயம் காட்டும் அரசு ICU வார்டு… நோயாளிகள் தலைக்கு மேல் கொட்டும் மழைநீர்… மின்கசிவு அபாயத்தில் தவிக்கும் நோயாளிகள்…!”

மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…

13 minutes ago

நாடே அதிர்ச்சி… பள்ளிக்குள்ளேயே கதறிய 13 வயது சிறுமி… 5 சிறுவர்கள் செய்த காரியம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…

14 minutes ago

BREAKING: பிரதமர் மோடியை கொலை செய்வோம்… சற்றுமுன் பரபரப்பு…!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும்…

14 minutes ago

“ஓ மை காட்… அமெரிக்காவில் அரங்கேறிய மளிகைக் கடையில்… தள்ளுபடி காய்கறிக்காக அடித்துக்கொண்ட இந்தியர்கள் – உலக அரங்கில் நாறிப்போன இந்தியாவின் மானம்..? நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!”

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவின் போது, தள்ளுபடி விலையில்…

25 minutes ago

தலைக்கு மேல் தீ… கண்ணெதிரே மரணம்… மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் அரங்கேறிய நரகக் காட்சி…!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ குடியிருப்பு கட்டிடத்தின் இரண்டாவது பிரிவில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென பயங்கர தீ…

42 minutes ago