டாக்டர் APJ அப்துல் கலாம் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக இருந்துள்ளார். விஞ்ஞானியான APJ அப்துல் கலாம் அவர்கள் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். சுமார் ஐந்து ஏவுகணை திட்டங்களில் APJ அப்துல் கலாம் பணிபுரிந்துள்ளார்.
மக்களின் ஜனாதிபதி என அன்போடு அழைக்கப்பட்ட APJ அப்துல் கலாம் நம் நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் தான் உள்ளது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும் இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மாணவர்களால் மட்டும் தான் முடியும் என்பது அவரது நம்பிக்கை. APJ அப்துல் கலாமின் அசாதாரண சாதனைகள் பற்றி நன்கு தெரிந்த நடிகர் யோகி சேது அப்துல் கலாம் பற்றி டாக்குமென்டரி எடுக்க பல வழிகளில் முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து கேமராமேனாக வேலை பார்த்த சீதாராமன் என்பவர் மூலமாக அப்துல் கலாமுக்கு தெரியவந்தது. அவர் நான் ஒரு சாதாரண ஆளு என்னை பற்றி டாக்குமெண்ட்ரியா? எனக்கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஜனாதிபதியாக பதவியில் அமர்ந்திருந்த அப்துல் கலாமை யூகி சேது நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது தான் டாக்குமென்டரி எடுக்க முயற்சி செய்ததை நினைவு கூர்ந்தார்.
மேலும் “நான் அன்றைக்கே சொன்னேன் சாதாரணத்தில் இருந்து தான் அசாதாரணம் பிறக்கின்றது. அது நிரூபணம் ஆகிவிட்டது அல்லவா? என யூகி சேது கூறியுள்ளார். அதற்கு சிரித்தபடியே தன்னடக்கத்துடன் பதில் அளித்த அப்துல் கலாம் அய்யா “யார் சொன்னது? இன்றும் நான் ஒரு சாதாரண ஆளுதான்” என கூறியுள்ளார். அன்றைக்கே யூகி சேது டாக்குமெண்டரியை எடுத்திருந்தால் அப்துல் கலாம் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும். இந்த தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நினைவு கூர்ந்தார்.