Connect with us

HISTORY

ஜன கண மன அதி பாடல் தேசிய கீதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா? ஒரு வங்காளப் பாடல் தேசிய கீதமாக ஆனது இப்படித்தான்!

இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில் பலர் நமது தேசிய கீதம் ஹிந்தி மொழியில் எழுதப்பட்டதாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால் அது முழுக்க முழுக்க வங்காள மொழியில் எழுதப்பட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து நிலங்களும் அந்த பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதுதான் நமது தேசிய கீதத்திற்கான சிறப்பு. ரபிந்திரநாத் தாகூர் “ஜன கண மன” பாடலை 1911 ஆம் ஆண்டு இயற்றினார். இந்த பாடல் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தினரால் அவர்களது ராணுவ கூடல்களில் எழுச்சி மிக்க பாடப்பட்டது.

   

Rabindranath Tagore

அந்த சமயத்தில் “சாரே ஜகான் சே அச்சா”, வந்தே மாதரம்” போன்ற எழுச்சி மிக்க பாடல்களும் உருவாகியிருந்தன. இதில் “வந்தே மாதரம்” பாடல் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் 1882 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திர சாட்டர்ஜி அந்த நிலப்பரப்பின் பிரதான தெய்வமான காளி தெய்வத்தை அந்த பாடலில் வணங்கி பாடியிருப்பார். இது முஸ்லீம்களின் மத உணர்வை புண்படுத்தும் என்பதால் இந்த பாடலை தேசிய கீதமாக அறிவிக்ககூடாது என்று பல எதிர்ப்புகள் கிளம்பின.

இதில் “ஸாரே ஜகான் சே அச்சா” பாடல் 1904 ஆம் ஆண்டு கவிஞர் இக்பாலால் எழுதப்பட்டது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி  24 ஆம் தேதி நடந்த அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில் அப்போதைய குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், இந்த மூன்று பாடல்களில் எது தேசிய கீதமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் “ஜன கண மன” பாடல் தேசிய கீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகுதான் இந்தியாவின் தேசிய கீதமாக “ஜன கண மன” பாடல் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கத் தொடங்கியது.

Continue Reading

More in HISTORY

To Top