மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் கணவர் ஒருவர் தன்னுடைய நண்பருக்கு 50 ஆயிரம் ரூபாய் கடனை அடைப்பதற்கு மனைவி விற்றதாக கூறப்படுகிறது . அதன்பிறகு அவருடைய மனைவியின் நண்பர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்கள். மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர வயது நபர் ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளார் .சூதாட்டத்தால் அவருக்கு 50000 ரூபாய் வரை கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைப்பதற்காக நண்பர்கள் சிலரிடம் பணம் வாங்கி வந்துள்ளார். இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்கள்.
இதனால் கடனை அடைப்பதற்கு என்ன வழி என்று தெரியாமல் நண்பர் ஒருவருக்கு தன்னுடைய மனைவியை விற்றுள்ளார். அந்த பெண்ணை தனக்காக அந்த நண்பர் பாலியல் அடிமையாக மாற்றி பலமுறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கொடுமை தாங்க முடியாத அந்த பெண் அவருடைய பிடியிலிருந்து தப்பித்து வந்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் கணவரையும் பாலியல் பலாத்காரம் செய்த கணவரின் நண்பரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…