மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், மனைவியைக் கொலை செய்துவிட்டு இரண்டு நாட்களாக சடலத்துடன் கணவன் வீட்டிற்குள்ளேயே தங்கியிருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 38 வயதான ஜெகதீஷ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், தனது மாணவியின் சகோதரியான 25 வயது ரீமாபாயை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். இதனால் முதல் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில், ஜெகதீஷ் தனது இரண்டாவது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கூலி வேலை செய்து வந்த ஜெகதீஷிற்கும் ரீமாபாய்க்கும் இடையே குடும்பப் பிரச்சனைகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ரீமாபாய் சரியான நேரத்திற்குச் சமைக்காமல் குழந்தைகளைக் கவனிக்கவில்லை எனக் கூறி ஜெகதீஷ் சண்டையிட்டு வந்துள்ளார். பெரியோர்கள் பலமுறை சமாதானம் செய்தும் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜெகதீஷ், ரீமாபாயைக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் ரீமாபாய் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகு எவ்விதப் பதற்றமும் இன்றி, மனைவியின் உடலைக் கட்டிலில் உறங்குவது போல் கிடத்திய ஜெகதீஷ், தனது இரு குழந்தைகளை அடுத்த அறையில் உறங்க வைத்துள்ளார். பின்னர் தானும் மனைவியின் சடலத்திற்கு அருகிலேயே இரண்டு நாட்கள் படுத்து உறங்கியுள்ளார். வீடு பூட்டப்பட்டு இரண்டு நாட்களாகியும் அவர்கள் வெளியே வராததாலும், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாலும் சந்தேகமடைந்த ஜெகதீஷின் தந்தை போலீசாருக்குத் தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அழுகிய நிலையில் ரீமாபாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்தக் கொடூரச் செயல் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜெகதீஷைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆத்திரத்தில் மனைவியைக் கொன்றதையும், பிணத்துடனேயே இரண்டு நாட்கள் வசித்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். கைதான ஜெகதீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். குடும்பத் தகராறில் மனைவியைக் கொன்று சடலத்துடன் கணவன் குடும்பம் நடத்திய இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் தொடர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த…
அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், திருச்சி,…