மெக்சிகோவின் டெனான்சிங்கோ (Tenancingo) நகரம், உலகின் ‘பாலியல் அடிமைத்தனத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் நிலையில், அங்கு கடத்தப்படும் இளம் சிறுமிகள் மற்றும் பெண்கள் தினசரி 20 மணி நேரம் வரை கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்குள்ள வறுமை மற்றும் குடும்பப் புறக்கணிப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் கடத்தல் கும்பல், ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலம் அமைத்துத் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏழைப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துகிறது. அவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டு இந்த அருவருப்பான பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் 11 வயது சிறுமிகள் கூட, பல ஆண்களால் தொடர்ச்சியாகச் சித்திரவதை செய்யப்படுவதோடு, அவர்களில் சிலர் கர்ப்பமான பிறகு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற பகீர் உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இந்த நரகக் குழியில் இருந்து தைரியமாக உயிர் பிழைத்த சோபியா (மாற்றப்பட்ட பெயர்) என்ற பெண், தனது 14 வயதில் நேர்ந்த கொடூரங்களை அம்பலப்படுத்தியுள்ளார். மெக்சிகோ நகரின் வறுமையான சூழலில் வளர்ந்த இவரை, ஜோஸ் என்ற 17 வயது சிறுவன் காதலிப்பது போல நாடகமாடி ஏமாற்றியுள்ளான். தனக்குப் பாதுகாப்பு கிடைத்துவிட்டது என நம்பிய சோபியாவை, மெக்சிகோ சிட்டியிலிருந்து த்லாக்ஸ்காலா மாநிலத்தில் உள்ள டெனான்சிங்கோவிற்கு கடத்திச் சென்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு பாலியல் அடிமையாக ஜோஸ் விற்றுள்ளான். அங்கிருந்து தப்பிக்க முயன்ற போதெல்லாம் சோபியாவின் தாடையை முறித்துக் கொடூரத் தண்டனை வழங்கிய கடத்தல்காரர்கள், தப்பியோடினால் அவரது உறவினர்களைக் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். தான் ஒரு சிறுமியாக இருந்தபோது இழைக்கப்பட்ட இந்த அநீதியின் உடல் மற்றும் மன ரீதியான வடுக்களை அவர் இன்றும் சுமந்து வருகிறார்.
டெனான்சிங்கோவில் சோபியாவின் இந்த கொடூர அனுபவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல, மாறாக அங்கு ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் இதேபோல பாலியல் அடிமைத்தனத்திற்குள் கட்டாயப்படுத்தித் தள்ளப்படுகிறார்கள். 32 வயதான கார்லா ஜான்சிட்டோ ரொமெரோ என்ற மற்றொரு பெண், தான் 16 வயதை எட்டுவதற்கு முன்பே ஆயிரக்கணக்கான முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். டெனான்சிங்கோவில் வளர்க்கப்படும் சிறுமிகள், தங்களின் 12 வயதிலேயே பாலியல் தொழிலுக்காக மூளைச்சலவை செய்யப்பட்டுத் தயார்படுத்தப்படும் அவலம் அங்கு தொடர்கிறது. சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், மனித கடத்தல் நெட்வொர்க்குகளின் கொடூர முகத்தை உலகிற்கு மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள…
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர்…
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்குத் திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், கணவனின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர்…
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து…
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில், பிதாபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் தம்பதி ஒருவர், தங்களது இரண்டு குழந்தைகளுடன்…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கொடூர சம்பவம்…