ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். வாழ்வாதாரத்திற்காக அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பேன்சி கடையில் வேலை செய்து வரும் இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த நிதி நிறுவன ஊழியரான நாகேந்திரனுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக நாகேந்திரனுடன் பேசுவதை அஞ்சு தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரன், அஞ்சு வேலை பார்த்த கடைக்கே நேரில் சென்று வாக்குவாதம் செய்ததோடு, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கத்திக்குத்தால் படுகாயமடைந்து அலறிய அஞ்சுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய நாகேந்திரனும் சிறிது நேரத்திலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக பொதுமக்களால் மீட்கப்பட்ட அவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது இருவருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாளவாடி காவல்துறையினர், இந்தத் தாக்குதலுக்கான பின்னணி மற்றும் முழுமையான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கத்திக்குத்து மற்றும் தற்கொலை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய்யின் அரசு 100 நாட்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு நாளிதழ்களில்…
உங்கள் நண்பர் ஹர்ஷ் கடந்து வந்த பாதை மிகவும் மனவேதனை அளிக்கக்கூடியது; விவாகரத்தின் வலியால் துவண்டுபோன ஒரு பெண்ணுக்கு அரணாக…
தமிழக சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் போது, இந்தத்…
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடையும் இவ்வேளையில், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்துக்…
ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பிஸ்மில்லா காலனியில் தங்கி பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது…
சஹாரன்பூரில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 15 வயது சிறுமியான தீக்ஷா சர்மா பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளார். ஜைத் என்பவர்…