குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாலன்பூர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள், கணவனே தனது மனைவியை மனித கடத்தல் கும்பலிடம் விற்று, அவர் கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. கடந்த மே 19-ஆம் தேதி, கணேஷ்புராவைச் சேர்ந்த நிகேஷ் பட்டேல் என்பவர், தனது மனைவி மர்மமான முறையில் காணாமல் போய்விட்டதாகப் நாடகமாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆரம்பத்தில் இதனைச் சாதாரண காணாமல் போன வழக்காகக் கருதிய காவல்துறைக்கு, டி.எஸ்.பி டாக்டர் ஜிக்னேஷ் காமித் மேற்பார்வையில் நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் கணவனின் துரோகமும் பேராசையும் வெளிச்சத்திற்கு வந்தது. தனது மனைவியைப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, வெறும் 50 ஆயிரம் ரூபாய்க்கு அவரை விற்பனை செய்ததை நிகேஷ் பட்டேல் ஒப்புக்கொண்டார்.
கணவனின் வாக்குமூலத்தை அடுத்து, பாலன்பூர் மேற்கு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி, அந்தப் பெண்ணை மனித கடத்தல் கும்பலிடமிருந்து பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட அந்தப் பெண் அளித்த வாக்குமூலம் பார்ப்போரைக் கண்ணீர் வடிக்கச் செய்வதாக இருந்தது. எங்கோ சுற்றுலா செல்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி அழைத்துச் சென்றதாகவும், பின்னர் திட்டமிட்டபடி தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வைத்து விற்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கடத்தப்பட்டிருந்த நாட்களில் தான் பல்வேறு நபர்களால் கொடூரமாகக் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், தன்னிடம் இருந்த தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு தன்னை அடிமைபோல அடைத்து வைத்திருந்ததாகவும் அவர் கண்ணீருடன் விவரித்தார்.
இந்த மனிதாபிமானமற்ற கொடூரத் திட்டத்திற்கு நிகேஷ் பட்டேலின் நண்பர்களான சஞ்சய் தாக்கூர், அசோக் தாக்கூர் மற்றும் சச்சின் தர்பார் ஆகியோரும் உடந்தையாக இருந்து முன்கூட்டியே சதித் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் மனித கடத்தல், கூட்டு பலாத்காரம், கொள்ளை மற்றும் குற்றவியல் சதி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் துரோகம் இழைத்த கணவன் நிகேஷ் பட்டேல் உட்பட இதுவரை 7 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பணத்திற்காகத் தாலிக்கட்டிய மனைவியையே விற்று இவ்வளவு பெரிய துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய இச்சம்பவம், மனிதநேயம் வீழ்ந்து கிடப்பதைக் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…