சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, தமிழகத்தின் வளிமண்டலத்தில் மூன்று முக்கியச் சுழற்சிகள் நிலவி வருகின்றன. வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரத்திலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 3.1 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரத்திலும், அதேபோல மத்தியகிழக்கு-தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டலச் சுழற்சியும் காணப்படுகிறது. இந்த வளிமண்டலச் சுழற்சிகளின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (27-05-2026) நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை (28-05-2026) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, 29-05-2026 அன்று வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை ஒருபுறம் இருந்தாலும், வட உள் தமிழகப் பகுதிகளில் இன்று முதல் மே 29 வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும் தமிழகம் முழுவதும் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். இருப்பினும், மே 29 வரை கடலோரத் தமிழகப் பகுதிகளில் அதிக வெப்பமும், காற்றில் அதிக ஈரப்பதமும் கலந்திருக்கும் என்பதால், ஓரிரு இடங்களில் பொதுமக்களுக்கு உடல் ரீதியான அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகப் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. நாளை சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை மேலும் அதிகரித்து 40-41 டிகிரி செல்சியஸைத் தொடக்கூடும் என்பதால், கடுமையான வெப்பம் காரணமாகப் பொதுமக்களுக்கு அசௌகரியமான சூழல் நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் எச்சரித்துள்ளது.
டெல்லிக்குச் சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டு இளம் பெண் ஒருவர், விமான நிலையத்திற்கு வெளியே ஏழைப் பெண்கள் சிலர் உதவி…
தைவான் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், சுத்தமான குடிநீரை அருந்துவதைப் முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகத்…
கோவை மாணவர் கொலை சம்பவம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது திமுக சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில்…
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர மோதல்களுக்கு மத்தியில், நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யும்…
தமிழக பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களின் வசதிக்காக 'ஸ்டார் 3.0' மென்பொருள் மூலம் பல்வேறு டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்…
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக அமைத்த மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நோக்கில் உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும்…