Connect with us

TECH

Google-ஐ கலக்கும் தமிழன்.. CEO-வாக பணிபுரிய சுந்தர் பிச்சை வாங்கும் சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

தமிழ்நாட்டில் மதுரை மண்ணில் பிறந்து இன்று இணையத்தையே ஆளும் அரசனான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர்தான் சுந்தர் பிச்சை. வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில் தான். ஐஐடி கோராக்பூரில் தனது பொறியியல் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை பின்னர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் எம்.எஸ். மற்றும் எம்.பி.ஏ ஆகிய படிப்புகளை முடித்தார். அசுரன் படத்தில் வருவது போல நம்ம கிட்ட காசு, பணம் எதுவேணாலும் எடுக்கலாம். ஆனா கல்வியை மட்டும் எடுக்க முடியாது என்ற வசனத்தை உண்மையாக்கி இன்று இணைய உலகை ஆளும் கூகுளின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் சுந்தர் பிச்சை.

#image_title

   

கூகுள் நிறுவனத்தின் பணியில் சேர்வதற்கு முன்னர் சுந்தர் பிச்சை அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தில் பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மை மற்றும் மெக்கின்சி & கம்பெனியில் மேலாண்மை ஆலோசனையில் பணியாற்றினார்.  அதன்பின்னர் கடந்த 20 வருடங்களுக்கு முன் அதாவது 2004-ல் கூகுளில் ஒரு சிறிய பதவியில் கால் பதித்தார். படிப்படியாக முன்னேறி கூகுள் நிறுவனத்தின் இணைய உலாவியான கூகுள் க்ரோம் மற்றும் குரோம்ஓஎஸ் உள்ளிட்ட கூகுளின் கிளையன்ட் மென்பொருள் தயாரிப்புகளின் தொகுப்பிற்கான தயாரிப்பு மேலாண்மை மற்றும் கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு அவர் தலைமை தாங்கினார் , மேலும் கூகுள் டிரைவிற்கு பெரும் பொறுப்பாக இருந்தார். ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற பிற பயன்பாடுகளின் பொறுப்பிலும் அவர் நிர்வகித்து வந்தார்.

#image_title

தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து கடந்த 2019-ம் ஆண்டு முதல் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட உலகின் டாப் 10 சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் சுந்தர் பிச்சை.

சுந்தர் பிச்சை  கூகுள், அதனைத் தொடர்ந்து அதன் ஆரம்ப நிறுவனமான ஆல்பாபெட் ஆகியவற்றின் சி.இ.ஓ-வாக இருந்து  80 ஆயிரம் கோடியை சம்பளமாக பெற்றுள்ளார் என்கிறது அந்தச் செய்தி. கடந்த 2015 முதல் 2020 வரையான 5 ஆண்டுகளில் இந்த தொகையை சம்பளமாக, பங்குகள், இழப்பீடுகள், பணம் என்ற வகையில் பெற்றுள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதலிடத்தில் இருப்பவர் பேஸ்புக் நிறுவனர் மார்ஸ் ஸூபர்பெர்க். இவர் இந்திய மதிப்பில் 4.17 இலட்சம் கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். கடந்த, 2012 முதல் 2020 வரையில் பங்குகள் மற்றும் பணமாக இந்தத் தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#image_title

Continue Reading

More in TECH

To Top