புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த 55 வயதான சித்திபவுசியா என்ற பெண்மணி, தேனியில் உள்ள கும்பலால் நகை மற்றும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு தேனி வீரபாண்டியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருடன் ஏற்பட்ட அறிமுகத்தின் மூலம், சுக்குவாடன்பட்டியைச் சேர்ந்த ஆண்டவர் உள்ளிட்ட சிலருடன் சித்திபவுசியாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் தங்களிடம் இருக்கும் “மந்திரக் கற்களை” வைத்துப் பூஜை செய்தால் செல்வங்கள் பெருகும் என்று ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளனர்.
இந்த மோசடித் திட்டத்தை நம்பிய சித்திபவுசியா, தனது நண்பர்களான வெங்கடேசன் மற்றும் பெரியண்ணா ஆகியோருடன் புதுக்கோட்டையிலிருந்து தேனிக்குச் சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஆண்டவர் ஒரு வண்ணக் கல்லைக் காட்டி பூஜை செய்துள்ளார். அப்போது மந்திரக் கற்களுக்கு முன்னால் நகை மற்றும் பணத்தை வைத்தால் அவை இரட்டிப்பாகும் என்று அவர் கூறவே, சித்திபவுசியா தனது 2 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை வைத்துள்ளார். அவருடன் வந்தவர்களும் தங்களிடம் இருந்த பணத்தையும் போன்களையும் அங்கு வைத்துள்ளனர்.
பூஜை முடிந்த பிறகு, மறுநாள் வந்து இரட்டிப்பான நகை மற்றும் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறி அவர்களை ஆண்டவர் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், மறுநாள் அவர்கள் வந்து கேட்டபோது, நகை மற்றும் பணத்தைத் தர மறுத்ததோடு மட்டுமல்லாமல், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சித்திபவுசியா உடனடியாக தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, ஆண்டவர், நாகராஜ் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். விசாரணையில், ஆண்டவர் என்பவர் ஏற்கனவே தேனி மற்றும் வீரபாண்டி பகுதிகளில் சினிமா பாணியில் இதுபோன்று பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடி கும்பலில் தொடர்புடைய மற்ற நபர்களைப் போலீசார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…