திமுக vs தவெக: “தம்பட்டம் அடிக்காதீங்க..” முதல்வர் ஸ்டாலின் ‘வீக் பாயிண்ட்டை’ தாக்கும் தளபதி… அனல் தெறிக்கும் தேர்தல்களம்..!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் அரங்கேறிய ரவுடிகளின் வெறியாட்டம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. கஞ்சா போதையில் இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்ற பொதுமக்களைத் துரத்தித் துரத்தி வெட்டியதில் மாற்றுத்திறனாளி ஜான் மற்றும் ஒரு வடமாநிலத் தொழிலாளி என இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்குக் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ள விஜய், “நம்பர் 1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?” என்று நேரடியாகச் சாடியுள்ளார். உலக நாடுகளுடன் போட்டி போடும் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே என்றும், இந்தியாவின் டாப் மாநிலம் என்று சொல்லப்படும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே இருக்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். போதைக் கும்பல்கள் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்துவதை இந்த அரசு வேடிக்கை பார்க்கிறதா என்ற அவரது பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தனது பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கிச் சீறியுள்ள விஜய், “ஆட்சியே முடியப் போகிறது, இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?” என்று கேட்டுள்ளார். மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பின்றிப் புலம்பித் தவிப்பதாகவும், மக்களின் நலனில் துளியும் அக்கறை காட்டாத இந்த திமுக ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி என்றும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய்யின் இந்த “உறுதி உறுதி உறுதி” என்ற முழக்கம் அரசியல் களத்தை இன்னும் சூடாக்கியுள்ளது.

நாங்குநேரி சம்பவம் ஒருபுறம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும் ஆளுங்கட்சிக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளன. குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் இந்தத் தீவிரத் தாக்குதல், வரும் தேர்தலில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவையே பிரதானப் பிரச்சினைகளாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள விஜய், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Muthu Mani

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

5 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago