திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனை குறித்து செய்தி சேகரித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரான ஹாஜா மொகைதீன் (38) என்பவர், அப்பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் கஞ்சா விற்பனை குறித்துத் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பல், செய்தியாளரை வழிமறித்து சரமாரியாகத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். தற்போது அவர் சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில், கஞ்சா வழக்கில் கைதாகி சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த அப்துல் பாசித் என்பவன் இருப்பது தெரியவந்துள்ளது. அவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டு இந்தத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளான். செய்தியாளர் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் சக பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அப்துல் பாசித் மற்றும் அவனது கஞ்சா கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டு, கோவை மாவட்டத்தில் மட்டும் 6 தொகுதிகளில் வென்று அரசியல்…
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள '4ever' மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மசாஜ் சிகிச்சையாளர் சுமித்…
தமிழ் திரையுலகில் எதற்கும் அஞ்சாமல், தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள் மற்றும் நடிகர்களின் சம்பளப் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வந்த மூத்த…
ஐஐடி டெல்லி (IIT Delhi) மாணவர்களின் சம்பளப் பேக்கேஜ் மற்றும் இன்டர்ன்ஷிப் சம்பளம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்…
சேலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வின்ஸ்டார் சிவக்குமார் என்பவரை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான அமைச்சர் கே.ஏ.எஸ்.…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சஞ்சய் என்பவருக்கும், அண்டை கிராமமான கெச்சிலாபுரத்தைச்…