தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டு, கோவை மாவட்டத்தில் மட்டும் 6 தொகுதிகளில் வென்று அரசியல் அரங்கில் தடம் பதித்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின் எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், அரசு அதிகாரிகளைத் தனது வீட்டிற்கே வரவழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்திய விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஜோதிடம் மூலம் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய அவர், இப்போது அடுத்த சர்ச்சையில் களம் இறங்கியுள்ளார்.
பொதுவாகத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த தொகுதிகளுக்குச் சென்று, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளை அரசு அலுவலகங்களிலேயே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி, துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு அரசு அதிகாரிகளை வரவழைத்துப் பேசியுள்ளார். பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்திய புகைப்படங்களை அவரே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
தொகுதியில் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துவது, தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்துவது மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடியதாக கனிமொழி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. “அரசு மேல் அதிகாரிகளைத் தன் வீட்டுக்கு வர கட்டாயப்படுத்தி ஆய்வு செய்த அதிகாரத்தை இந்த சட்டமன்ற உறுப்பினருக்குக் கொடுத்தது யார்?” என்று திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, தமிழக முதலமைச்சர் மற்றும் கோவை ஆட்சியருக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் எதிர்ப்பாளர்களைத் தாண்டி, இந்த விவகாரத்தில் தவெக தொண்டர்களே கனிமொழிக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பி வருவதுதான் ஹைலைட். மக்களின் குறைகளைக் கேட்கவும், வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடவும் களத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த வேண்டிய மக்கள் பிரதிநிதி, வீட்டில் அமர்ந்தபடி அதிகாரிகளை வரவழைப்பது தவறான முன் உதாரணம் என்று தவெகவினரே சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். களப்பணியில் இறங்காமல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…
சம்பவத்தின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அகர்வால் எரிபொருள் நிலையத்திற்கு வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ…