“காரை நிறுத்து.. நான் போறேன்”…. அடையாறு பாலத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் குதித்த அந்த 5 நிமிட கொடூரம்… ஓட்டுநர் சொன்ன கண்ணீர் வாக்குமூலம்…!

Spread the love

தமிழ் திரையுலகில் எதற்கும் அஞ்சாமல், தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள் மற்றும் நடிகர்களின் சம்பளப் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வந்த மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் (85), அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ படத்தின் மூலம் தனது தயாரிப்புப் பயணத்தைத் தொடங்கி, பல படங்களை உருவாக்கியவர் இவர். சமீபகாலமாக யூடியூப் நேர்காணல்களில் சினிமா துறையின் முறைகேடுகளைத் தட்டிக்கேட்டு வந்த இத்தகைய தைரியமான மனிதர், இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்ததை யாராலும் நம்ப முடியவில்லை.

சம்பவத்தன்று நேரில் நடந்த கொடூரத்தை கே. ராஜனின் கார் ஓட்டுநர் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். கடந்த 17ஆம் தேதி மாலை, வழக்கம்போல கார் ரைடு சென்ற கே.ராஜன், அடையாறு பாலத்தின் அருகே வந்ததும், “நான் வாக்கிங் செல்ல வேண்டும், நீ காரை எடுத்துக்கொண்டு போ” என்று கூறியுள்ளார். ஓட்டுநர் காரை நகர்த்திவிட்டு பக்கவாட்டு கண்ணாடியில் பார்த்தபோது, ராஜன் திடீரென பாலத்தின் கம்பிக்குள் தலையை விட்டு ஆற்றுக்குள் குதித்துள்ளார். ஓட்டுநர் பதறியடித்துக் கொண்டு காப்பாற்ற ஓடுவதற்குள் அவர் நீரில் மூழ்கிவிட்டார். அந்த இடம் 10 அடி ஆழத்திற்கு மேல் சேறும் சகதியுமாக இருந்ததால், நீச்சல் தெரிந்தவர்களால்கூட உடனடியாக அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மரணத்தை ஒட்டி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அவரது உறவினர்கள், அவருக்குக் குடும்பப் பிரச்சினையோ அல்லது பணப் பிரச்சினையோ இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். அவர் சத்தம் பிடிக்காமல் தனிமையில் வாழ்ந்தாரே தவிர, அவரது மகன்களும் மகள்களும் அவரை தினசரி அன்போடு கவனித்து வந்துள்ளனர். மேலும், அவர் யாரிடமும் கடன் வாங்கவில்லை; மாறாக பலருக்கு 20 கோடி ரூபாய் வரை கடன் கொடுத்து, அது திரும்ப வராத நிலையிலும் தாராளமாகவே வாழ்ந்துள்ளார். எனவே, கடன் சுமை காரணமாக அவர் இந்த முடிவை எடுக்கவில்லை என்று குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

அவரது தற்கொலைக்கான உண்மையான காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அனுபவித்து வந்த கடுமையான இதயக் கோளாறு மற்றும் உடல்நலக் குறைவுதான் என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்த அவருக்கு, மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் 12 லட்சம் ரூபாய் செலவில் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தாங்க முடியாத வலியினாலும், தலை பாரத்தினாலும் தூக்கமின்றி தவித்த அவர், தன் உடல்நிலையால் குடும்பத்தினருக்குக் கூடுதல் கஷ்டம் வரக்கூடாது என்ற வேதனையிலேயே இந்தத் தீவிரமான முடிவை எடுத்துள்ளார். தயவுசெய்து அவர் மீது அவதூறு பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவரது குடும்பத்தினர், தயாரிப்பாளர்கள் அவரிடம் வாங்கிய 20 கோடி ரூபாயைத் திரும்பக் கொடுத்தால் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Nanthini

Recent Posts

BREAKING: போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… தமிழகத்தில் உச்சக்கட்ட பரபரப்பு….!

நெல்லை மாவட்டம் மானூர் புறக்காவல் நிலையம் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில்…

5 minutes ago

BREAKING: “அங்க EPS மீட்டிங்.. இங்க இவங்க மீட்டிங்”…. அதிமுகவில் திடீரென எகிறிய அரசியல் சூடு… கிடுகிடுக்கும் ராயப்பேட்டை….!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு…

15 minutes ago

BREAKING: “பதவி ராஜினாமா.. திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி”… ஸ்டாலின் முன்னிலையில் நடந்த ட்விஸ்ட்… TVK மீது அதிருப்தி….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு…

19 minutes ago

இனி ஒருத்தி எனக்கு வேண்டாம்.. வெளிநாட்டுப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு.. கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. கணவன் கண்ணீரோடு தற்கொலை..!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும்,…

23 minutes ago

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… அடுத்த 24 மணிநேரத்தில் நடந்த ட்விஸ்ட்… CM விஜய்யின் முதல் ‘அதிரடி ஆட்டம்’….!

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில்…

25 minutes ago