ஐஐடி டெல்லி (IIT Delhi) மாணவர்களின் சம்பளப் பேக்கேஜ் மற்றும் இன்டர்ன்ஷிப் சம்பளம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 1.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் மாணவர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள வேலை வாய்ப்புகளின் வருடாந்திர சம்பள விவரங்களை கேமராவின் முன்னால் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.
அந்த வீடியோவின் தொடக்கத்தில் ஒரு மாணவர் தனக்கு ₹90 லட்சம் பம்பர் பேக்கேஜ் கிடைத்துள்ளதாகக் கூறுகிறார். மேலும், எலக்ட்ரிக்கல் முதல் பயோடெக்னாலஜி வரையிலான பல்வேறு துறைகளைச் சேர்ந்த மற்ற மாணவர்கள் தங்களுக்கு ₹18 லட்சம் முதல் ₹90 லட்சம் வரையிலான பேக்கேஜ்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, மற்றொரு மாணவர் தனக்கு முழுநேர வேலைக்கு முன்பாக வழங்கப்படும் இன்டர்ன்ஷிப் (முறையான பயிற்சி) காலத்திலேயே மாதத்திற்கு ₹75,000 சம்பளமாகக் கிடைப்பதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை உருவாக்கிய மயங்க் என்ற மாணவரிடம் அவருடைய சம்பளம் பற்றிக் கேட்டபோது, “ஐஐடியில் இருந்து எனக்குப் பெரிய பேக்கேஜ் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் பேக்கேஜை விட உயர்ந்த அன்பான நண்பர்கள் கிடைத்துள்ளனர்” என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DYZffsWpT6b/?utm_source=ig_web_copy_link
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல நெட்டிசன்கள் தங்களின் தற்போதைய பொருளாதார நிலையையும் விதியையும் நொந்து கொண்டு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “அவர் எவ்வளவு சாதாரணமாக 90 லட்சம் என்று கூறுகிறார்!” என்றும், “இங்கு மக்கள் முழுநேர வேலைக்கே திண்டாடும் போது, இவர்களுக்கு இன்டர்ன்ஷிப்பிற்கே மாதத்திற்கு 75 ஆயிரம் கிடைக்கிறதே” என்றும் வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே வேளையில், ஐஐடியில் படிக்கும் சராசரி மாணவர்கள் முதல் டாப்பர்கள் வரை அனைவரும் தற்போதைய சூழலில் குறைந்தது மாதத்திற்கு ₹1.5 லட்சம் சம்பாதிப்பதாக இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பயனர் குறிப்பிட்டுள்ளார்.
பீகார் மாநிலம் கயா பகுதியில், சுமார் 12.756 கிலோகிராம் எடையுள்ள கஞ்சாவை சட்டவிரோதமாகக் கடத்திச் சென்ற 22 வயது இளம்பெண்…
துண்டிகல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பௌராம்பேட் போத்ராய் பகுதியில், தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான மூன்று பேருந்துகள் தீவிபத்தில் சிக்கி…
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தம்பதியினர் மீது சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக…
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் அமைந்துள்ள சுவாமி சாதக் கிராம் ஆசிரமப் பகுதியில், ராபின் என்ற அமெரிக்க நாட்டு இளைஞர் ஒருவர்…
மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி, காவல்துறையினரால் பலத்த பாதுகாப்புடன்…
பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையின் நடுவே, திடீரெனப் பூனை ஒன்று வழிதவறி வந்து சிக்கிக் கொண்டது. வேகமாக வரும்…