ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அதோனி பகுதியைச் சேர்ந்த கங்கம்மா என்ற பெண்ணிற்கு, கணவர் இறந்த பிறகு நரசிம்மலு என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்களின் வீட்டிற்கு நரசிம்மலு அடிக்கடி வந்து சென்றதை கங்கம்மாவின் 15 வயது மூத்த மகன் வீரேந்திரா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கங்கம்மாவும் அவரது காதலனும் சேர்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீரேந்திராவை கொடூரமாகக் கொலை செய்து சுடுகாட்டில் ரகசியமாகப் புதைத்தனர்.
மறுநாள், தனது மகனைக் காணவில்லை என நாடகமாடி கங்கம்மா காவல் நிலையத்தில் புகாரளித்தார். இரண்டு வருடங்களாக போலீஸார் தேடி வந்த நிலையில், கங்கம்மாவே நீதிமன்றத்தில் தன் மகனை போலீஸார் கண்டுபிடிக்கவில்லை என வழக்கும் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, கங்கம்மாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவரது கள்ளக்காதல் விவகாரமும், காதலனுடன் சேர்ந்து மகனைப் பெற்ற தாயே கொலை செய்த அதிர்ச்சி உண்மையும் அம்பலமானது.
இதனையடுத்து வீரேந்திராவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்த போலீஸார், கங்கம்மாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அவருக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தற்கொலை மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய கள்ளக்காதலன் நரசிம்மலுவைத் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…