தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ பெயரைக் குறிப்பிட்டு, தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் ஏற்றிச் சென்று அவர்கள் இந்த வக்கிரச் செயலில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தை வெளியில் கூறினால் தனது குழந்தையைக் கொன்றுவிடுவதாக அவர்கள் மிரட்டியதாகவும், விஜய் ரசிகையாக இருந்த பாவத்திற்கு தனக்குக் கிடைத்த தண்டனை இதுதானா என்றும் அவர் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தில் வருவது போல, தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குக் காரணமான அந்த இரண்டு நபர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தவெக இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் ஏற்கனவே கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் தவெகவினருக்கு எதிராகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…
இரயில் பெட்டியில் இருந்த அத்தனை பயணிகளின் கண்களையும் தன் பக்கம் திருப்பும் அளவிற்கு, இன்று ஒரு ரயிலின் இருக்கைக்காக மிகப்பெரிய…