“என் பொண்ணை யாரோ கொன்னுட்டாங்க” வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நடந்த பயங்கரம்… மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை.. போலீசாரையே அதிரவைத்த வாக்குமூலம்..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது மகளின் காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, முகம் அடையாளம் தெரியாமல் இருக்க ஆசிட் ஊற்றிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  லக்னோ அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சிறுமியின் தந்தை ரத்தன் சிங்குக்குத் தெரியவந்தபோது, அவர் தனது மகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனால், தந்தை எதிர்த்தும் அந்தச் சிறுமி தனது காதலைக் கைவிடாததால், ஆத்திரமடைந்த தந்தை மகளைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரத்தன் சிங் தனது மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், மகளின் உடல் அடையாளம் காணப்படக் கூடாது என்பதற்காகவும், போலீசாரை திசைதிருப்பவும் சிறுமியின் முகத்தில் ஆசிட்டை ஊற்றிச் சிதைத்துள்ளார். அதன் பிறகு, உடலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வயல்வெளியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

மறுநாள் காலையில் வயலில் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ரத்தன் சிங்கின் பேச்சில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இருந்தன. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, ‘கௌரவக் கொலை’ செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தற்போது ரத்தன் சிங்கை கைது செய்துள்ள லக்னோ போலீசார், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

8 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

8 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

8 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

8 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago