Connect with us

CINEMA

இமான் விவகாரத்தால் ‘அயலான்’ படத்துக்கு ஆபத்தா..? வான்டடாக வாய்விட்டு மாட்டிக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்..

தமிழ் சினிமாவில் பொங்கல் ரிலீஸ் படங்களாக அயலான், கேப்டன் மில்லர், மிஷன் மற்றும் மேரி கிறிஸ்துமஸ் ஆகிய 4 படங்கள் நேற்று வெளியாகின. இதில் நேருக்கு நேர் மோதுகிற படங்களாக அயலான், கேப்டன் மில்லர் படங்கள் இருந்தாலும், அதைவிட மிகப்பெரிய கேள்வியாக இருப்பது, இமான் விவகாரத்தால் அயலான் படத்தை ரசிகர்கள் ஏற்பார்களா, மாட்டார்களா என்பதுதான்.

கடந்த ஆண்டில் ஒரு நேர்காணலில் பேசிய இமான், சிவகார்த்திகேயன் குறித்த ஒரு சர்ச்சையாக கருத்தை வெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது. சிவகார்த்திகேயன் ரசிகர்களும் அதுபற்றி வெளியே பேசவே தயங்கும் நிலை உருவானது. ஆனால் தன்னை பற்றிய அந்த சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான பதிலும் சிவகார்த்திகேயன் தரவில்லை. அதுவும் பயங்கரமான விமர்சிக்கப்பட்டது.

   

இந்நிலையில் அயலான் படம் நேற்று வெளியானது. இமான் விவகாரத்துக்கு பின் ஏறக்குறைய மூன்று, நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் இந்த படம் வெளியானாலும், இன்னும் ஒரு சிலர் இந்த படம் சார்ந்த பிரமோ, புகைப்படங்களுக்கு கீழே மிக மோசமான வார்த்தைகளில் சிவகார்த்திகேயனை விமர்சிக்கவே செய்கின்றனர். ஆனால் அயலான் படம் மிகச்சிறந்த படமாக இருக்கும்பட்சத்தில், சிவகார்த்திகேயன் மீதான இந்த தனிப்பட்ட விமர்சனங்களை எல்லாம் கடந்து சிவகார்த்திகேயன் ஜெயிப்பார். படம் சுமாராக இருக்கும் பட்சத்தில் இன்னும் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து, படத்தை இன்னும் அதள பாதாளத்தில் கொண்டு சென்று ஊத்திக்கொண்ட படமாக மாற்றிவிடும்.

இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, அயலான் படத்தை பொருத்தவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த படமாக இருக்கிறது. இன்னும் படத்தில் நிறைய சுவாரசியங்களை தந்திருக்கலாம். அப்படியே ரங்கநாதன் தெருவில் கொண்டுபோய் விட்டிருந்தால் ஏலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் இன்னும் நிறைய விஷயங்களை சொல்லி இருக்க முடியும். கழிப்பிட வசதியின்மை, ஊழியர்கள் நின்றபடியே வேலை செய்வது என பல சமுதாய பிரச்னைகளை ஏலியன் வாயிலாக சொல்லி இருக்கலாம். அந்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டனர்.

இமான் விவகாரம் குறித்து யாருமே பேச தயாராக இல்லாத நிலையில், கேள்வி கேட்காத போது, அயலான் படத்துக்காக பிரஸ்மீட் வைத்த சிவகார்த்திகேயன், நான் சந்தோஷமாக இருக்கிறேன், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்கிேறன், எனக்கு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று அவரே, இமான் விஷயங்களை மீடியாக்களுக்கு நினைவு படுத்துகிறார். ஆனால் இந்த படம் ரசிகர்களால் எப்படி வரும் நாட்களில் கொண்டாபப்படுகிறது என்பதை வைத்தே, சிவகார்த்திகேயன் மீதான ரசிகர்களின் அபிப்ராயத்தை சொல்ல முடியும். ஆனால் இமான் விவகாரத்தால் அவரது 50 சதவீத இமேஜ் நொறுங்கி சிதறி போய்விட்டது என்பதுதான் உண்மை என்று அதில் அந்தணன் கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top