சென்னை அண்ணாநகர் கிழக்கு சத்யா நகரைச் சேர்ந்த 54 வயதுடைய சாந்தி என்பவரின் முதல் கணவர் கடந்த 2010-ல் தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் தன் மகனுடன் வசித்து வந்த சாந்திக்கு, 2016 முதல் அதே பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ராஜேந்திரன் என்ற முதியவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராஜேந்திரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருந்தபோதிலும், குடும்பப் பிரச்சினை காரணமாக அவர்களைப் பிரிந்து சாந்தியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்.
வயது மூப்பு காரணமாக ராஜேந்திரன் எந்த வேலைக்கும் செல்லாததால், சாந்தி தெருத் தெருவாகச் சென்று புடவை வியாபாரம் செய்து குடும்பத்தைக் கவனித்து வந்தார். தொழில் முதலீட்டிற்காகப் பலரிடம் கடன் வாங்கிய சாந்தி, அதனைத் திருப்பிக் கொடுக்காததால் கடன்கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து சண்டையிட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சாந்தியின் நடத்தை மீது ராஜேந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் இடையே தினமும் சண்டை நடந்து வந்துள்ளது.
நேற்றிரவும் வழக்கம்போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில், சாந்தி ராஜேந்திரனைத் திட்டிவிட்டு அறையில் தூங்கச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், இன்று அதிகாலை 3 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த சாந்தியைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார். பின்னர் அண்ணா நகர் காவல் நிலையத்திற்குச் சென்று தன் மனைவியைக் கொலை செய்துவிட்டதாகக் கூறி சரணடைந்தார். போலீஸார் சாந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, ராஜேந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் வேளாண் பெருமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என…
தமிழ்நாடு வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்…
தமிழக பட்ஜெட்டில் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு 'அண்ணன் சீர்' எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்களின்…
தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தைச் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். மாநிலத்தின்…