திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓசி டீ தராததால் டீ மாஸ்டர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கூத்தாண்டவ குப்பம் அருகே முருகன் என்ற நபர் டீக்கடை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவருடைய டீக்கடைக்கு வந்த மர்ம நபர்கள் தேநீர் கேட்டுள்ளனர். அப்போது டீக்கடையின் உரிமையாளர் பணம் கேட்டுள்ளார். ஆனால் டீ குடிக்க வந்தவர்கள் தங்களுக்கு இலவசமாக தரவேண்டும் என்று கூறி தவறில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் அவர்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் டீ மாஸ்டரை சரமாரியாக வெட்டினர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த டீ மாஸ்டரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து போலீஸ் சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீசார் மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் பைக்கை கைப்பற்றிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராகுல் பாலா என்பவரின் இன்ஸ்டாகிராம் பதிவு, வெளிநாட்டு வேலை பற்றிய கனவுகளுடன் இருக்கும்…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜோகிவாலா பகுதியில் அமைந்துள்ள பிரபல ஷாப்பிங் மால் வளாகத்தில், டெலிவரி பாய் ஒருவர் உணவு…
மதுரை அரசியலில் தவிர்க்க முடியாத ஒற்றைப் 'பவர் செண்டராக' தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் உருவெடுத்து வருவது…
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தனித்தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக தேர்தல் களம்…
தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினிப் பிரிவில் பணியாற்றி வந்த 35 வயது பெண் ஊழியர்…