“எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த மாஜி அமைச்சர்கள்”… இன்று இரவுக்குள் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம்… அதிமுகவில் அதிரடி திருப்பம்….!

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெறுவதில் கடும் இழுபறி நீடிக்கிறது. தற்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் 116 என்ற எண்ணிக்கையில் தவெக தவித்து வரும் நிலையில், அமமுக எம்எல்ஏ காமராஜின் ஆதரவு கடிதம் தொடர்பான சர்ச்சை விஜய்க்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தான் ஆதரவு அளிக்கவில்லை என காமராஜ் பின்வாங்கியதும், இது குறித்து விசாரணை நடத்த டிடிவி தினகரன் ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பதும் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு புறம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு தவெக-விற்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி மற்றும் லீமா ரோஸ் உள்ளிட்ட 5 முக்கிய எம்எல்ஏக்கள் பங்கேற்காதது எடப்பாடிக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. குறிப்பாக, தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினரான லீமா ரோஸ் வராதது, அவர் மூலம் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தவெக பக்கம் தாவக்கூடும் என்ற யூகங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இறுதி முடிவை எடுக்க வேண்டிய திருமாவளவன் இன்னும் மௌனம் காக்கும் நிலையில், ஆட்சிக் கட்டிலில் அமர விஜய் தீவிர காய்களை நகர்த்தி வருகிறார். புதுச்சேரியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டும் கூட அதிமுக கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பங்கேற்காதது, அவர்கள் விஜய்க்கு ஆதரவு அளிக்கத் தயாராகி விட்டார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் விஜய் பெயரைத் தவிர்க்கும் அதே வேளையில், இந்த 5 எம்எல்ஏக்களின் நிலைப்பாடுதான் அடுத்த சில மணி நேரங்களில் தமிழகத்தின் புதிய முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கப்போகிறது.

Nanthini

Recent Posts

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

19 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

30 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

36 minutes ago

“ஷூட்டிங் வரமாட்டேன்…” 28 ஆண்டுகளாக தீராத.. பார்த்திபன்- சேரன் சண்டை… எதனால் பிரச்சனை…? இணையத்தில் வைரலாகும் பழைய மோதல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…

44 minutes ago

“சூப்பரா பேசுனீங்க” இபிஎஸ்-ஐ மீறி முதல்வர் விஜய்யை நேரில் பாராட்டிய எஸ்பி வேலுமணி.. ஆடிப்போன அரசியல் களம்..!!

தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…

46 minutes ago

“400 அடி பள்ளம்” அடுத்த வாரம் கல்யாணம்… அதற்குள் நேர்ந்த கொடூரம்… வருங்கால கணவனின் உயிரைப் பறித்த காதலி – காரணத்தை கேட்டு அரண்டுபோன போலீஸ்..!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…

55 minutes ago