மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஹுஞ்சே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநரான கேதன், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அங்கு சென்றிருந்தார். ஆரம்பத்தில் பலத்த காற்று வீசியதால் நிலைதடுமாறி விழுந்துவிட்டதாக லோனாவாலா போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, இது ஒரு விபத்தாகவே பார்க்கப்பட்டது.
இருப்பினும், போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த மரணத்தின் பின்னணியில் இருந்த அதிர்ச்சியூட்டும் சதி அம்பலமானது. கேதனின் வருங்கால மனைவி மற்றும் அவருடைய ஆண் நண்பர் ஆகிய இருவருமே திட்டமிட்டு இந்த கொடூரத்தைச் செய்துவிட்டு, அதனை விபத்து போல நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, தொழிலதிபரின் மரணத்திற்குக் காரணமான அந்தப் பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதேபோல் டெல்லியின் காலிந்தி குஞ்ச் பகுதியிலும் ஒரு கொடூரமான தற்கொலை நாடகம் அரங்கேறியுள்ளது. அங்கு கணவன் ஒருவன் தன் மனைவியைக் கொலை செய்துவிட்டு, அவளது சடலத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, மனைவி தற்கொலை செய்துகொண்டதாகக் கத்தி அக்கம் பக்கத்தினரை வரவழைத்துள்ளான். ஆனால், பெண்ணின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் போலீசாரின் சந்தேகத்திற்குரிய விசாரணையின் மூலம் அது தற்கொலை அல்ல, கணவனே அரங்கேற்றிய கொலை நாடகம் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மும்பை அருகே உள்ள விரார் பகுதியில் இயங்கி வரும் பிரபல 'பார்பிகியூ நேஷன்' உணவகத்திற்கு ஆகஸ்ட் 19 அன்று யாஷ்…
மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ருசி ஆனந்த், தனது துறையின் கலாச்சார…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.…
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில் ஹன்னா இஸ்ரேல் என்பவரது குடும்பத்தினர் 'ஹீ-ஹா' என்ற குட்டி ஆண் கழுதையைத்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இடநெருக்கடி காரணமாகப் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு…
மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சி , குறிப்பிட்ட 20 இடங்களைத் தவிர்த்துப் பிற பொது இடங்களில் தெரு…