உத்திரபிரதேசம் மாநிலம் பரோகி மாவட்டம் கவாலி கிராமத்தை சேர்ந்த ராம்ஜி என்பவருக்கு திருமணம் ஆகி மனைவியும் நான்கு வயதில் விகாஸ் என்ற மகனும் இருந்தனர். இதனிடையே மது போதைக்கு அடிமையான ராம்ஜி அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்ஜி நேற்று மீண்டும் வழக்கம் போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவிக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ராம்ஜி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனை தரையில் வீசி அடித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமுறைவாக உள்ள ராம்ஜியை தேடி வரும் நிலையில் இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…