#image_title
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருக்கக்கூடிய நடிகர் அஜித் தற்பொழுது மகிழ்திருமேனி இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வலிமை படத்திற்கு பிறகு அவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்த நிலையில் வலிமை படத்தோடு வெளியான வாரிசு திரைப்படத்தை முடித்து அடுத்ததாக லியோ படத்தில் நடித்து அதனையும் முடித்து தற்பொழுது தனது 68வது படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இழுபறிக்கு பிறகு தற்பொழுது அஜித்தின் உடைய 63வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
#image_title
இந்த நிலையில் நடிகர் அஜித் சினிமாவில் முன்னணி நாயகராக வருவதற்கு முன்பு சில படங்கள் அவரை விட்டு சென்றிருக்கின்றன. சில படங்களை இவர் விட்டு சென்றிருக்கிறார். ஒரு சில படங்கள் பாதியிலேயே நின்றிருக்கின்றன. அந்த மாதிரியான படங்கள் சிலவற்றை தற்போது காண்போம்..
1. சாருமதி : 1997 ஆம் ஆண்டு இப்படத்தினுடைய போஸ்டர் வெளியானது. இசையமைப்பாளர் தேவா இசையமைப்பில் உருவாக இருந்ததாக இந்த படம் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கான காரணங்கள் இன்று வரை தெரியவில்லை.
2. நியூ: 2000 ஆம் ஆண்டு இப்படத்தினுடைய போஸ்டர் வெளியானது. அஜித் மற்றும் ஜோதிகா இருவரும் இப்படத்தில் ஒப்பந்தமாகி இருந்தனர். பின்பு சில பல காரணங்களால் இப்படத்தில். இருந்து இருவரும் விலகினர். இதனை அடுத்து 2004 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
#image_title
3. நந்தா : சேது படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா திரைப்படம் உருவானது. முதன் முதலாக அஜித்தை வைத்து தான் இப்படத்தை இயக்க இருந்தார் இயக்குனர் பாலா. ஆனால் சில காரணங்களுக்காக அஜித் இப்படத்தில் இருந்து விலகிய பிறகு, சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி அவர் நடிப்பில் வெளியாகி இப்படம் அவர் கேரியரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
#image_title
4. இதிகாசம்: சிட்டிசன் படத்திற்கு பிறகு அடுத்ததாக மீண்டும் சரவண சுப்பையாவுடன் இணைந்திருந்தார். அஜித் வரலாற்று பின்னணியை கொண்டு உருவாக இருந்த இந்த படமும் பாதியிலேயே நின்று போனது.
5. ஏறுமுகம்: இயக்குனர் சரனுடன் மூன்றாவது முறையாக அஜித் இணைந்த படம் ஏறுமுகம் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து நிலையில் அஜித்திற்கு கதை பிடிக்கவில்லை என்ற காரணத்தால் இப்படத்திலிருந்து அவர் விலகினார். அதனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் ஜெமினி என்ற பெயரில் இப்படம் வெளியானது.
#image_title
6. மகா: போலீஸ் த்ரில்லர் கதையாக உருவாக இருந்தது மகா. இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கத் தொடங்கினார். எட்டு நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற பொழுது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக படபிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு, அதன் பிறகு படமும் நிறுத்தப்பட்டது..
7. திருடா : டாக்டர் கதாபாத்திரத்தில் இப்படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருந்தார். சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் பிறகு படம் முழுவதும் நிறுத்தப்பட்டது.
#image_title
8. மிரட்டல்: ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்கக்கூடிய மிரட்டல் படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஆனால் இப்படத்தில் அஜித்தை மொட்டை அடிக்க இயக்குனர் கூறியதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. பின்னர் சூர்யாவை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் கஜினி என்ற பெயரில் இப்படத்தை எடுத்து வெளியிட்டு மிகப்பெரிய ஹிட் ஆக்கினார்.
#image_title
அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி,…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…
மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி…
ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 'வி கிராண்ட்' ஹோட்டல் அறையில், 26 வயது மதிக்கத்தக்க ரேணுகா…
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன்…