Categories: சினிமா

தமிழ் சினிமாவில் ‘டைம் ட்ராவல்’ கதைக்களத்துடன் வெளியான 5 படங்கள்.. மாஸ் பண்ணிய சிலம்பரசனின் ‘மாநாடு’..

Spread the love

டைம் டிராவல். இந்த வார்த்தையை எளிய மக்களுக்கு புரிய வைப்பதே பெரும் கஷ்டம். ஹாலிவுட் டைம் டிராவலிங் சம்பந்தப்படுத்தி பல படங்கள் எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வந்திருந்தாலும் கூட தமிழில் டைம் டிராவல் ஜானரில் ஒரு படத்தை இயக்குவது என்பது மிகவும் அரிதாகவே இருந்து வந்தது. காலம் மாற மாற ஒரு சில படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் அப்படங்கள் வருவதற்கு முன்பே சில படங்கள் டைம் டிராவல் ஜெனரல் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெறாமலும் இருந்துள்ளன. அந்த வகையில் டைம் ட்ராவல் ஜானரில் தமிழில் வெளியான சில படங்களை தற்போது பார்க்கலாம்..

1. ஒரு கன்னியும் 3 களவாணிகளும் :

2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியாகியது. இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் அருள் நிதி,பிந்து மாதவி, பகவதி பெருமாள் உட்பட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம், அப்போது பெரிதாக பேசப்படவில்லை. ஒரு கல்யாணம்… ஒரு கடத்தல். அந்தக் கடத்தல் ஒரு நிமிடம் முன் பின்னாக நடந்தால் என்ன ஆகும் என்ற ஃபேன்டசி கற்பனையே இப்படத்தின் கதை.

#image_title

2. இன்று நேற்று நாளை:

இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், குழந்தை வேலு, ரவி சங்கர் உட்பட பலர் நடிப்பில் உருவான இப்படம் மக்கள் ஏற்று கொள்ளும் படியான படமாக அமைந்தது. காமெடி ஜானரில் டைம் லூப் கலந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இப்படம்.

#image_title

3. 24:

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு இப்படம் வெளியானது. விக்ரம்.கே.குமாரின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் சூர்யா வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்திருந்தார். 24மணி நேரம் டைம் லூப் செய்யக் கூடிய வாட்ச்சை சூர்யா கண்டுபிடிக்க, அதனை திருட முயற்சிக்கும் வில்லன் சூர்யாவிடம் இருந்து அதை அவர் பெற்றாரா அல்லது அவரது மகனிடம் இருந்து பெற்றாரா என்பது தான் படத்தின் கதை..

4. ஜாங்கோ :

மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் 2021-ல் நவம்பர் மாதம் வெளியான படம் ‘ஜாங்கோ’. வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் இயந்திரத்தால் பூமிக்கு அடுத்த நாள் இல்லாமல் போகிறது. அக்டோபர் 2 என்ற ஒருநாள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் முடிந்து மீண்டும் துவங்கும்போது மக்களுக்கு எல்லாம் மறந்துபோகிறது. கதாநாயகனுக்கு மட்டும் எல்லாம் சரியாக நினைவு இருக்கிறது. தனது நினைவாற்றலை வைத்துக் கொண்டு அவர் பூமியை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ஜாங்கோ படத்தின் கதை.

#image_title

5. மாநாடு :

இந்தக் காலத்திற்கு ஏற்றாற் போன்றும் அனைவருக்கும் புரிவது போன்றும் வெங்கட் பிரபு எடுத்திருந்த படம் மாநாடு. 2021-ல் வெளியான இந்தப் படம் சிம்புவுக்கு மிகப்பெரிய கம் பேக்காகவும், திருப்பு முனையாகவும் இருந்தது. மேலும், இப்படங்கள் தவிர்த்து சாண்டி மாஸ்டரின் 3.33, அருள் நிதியின் தேஜாவு, டாப்சியின் கேம் ஓவர், சமீபத்தில் வெளியான விஷாலின் மார்க் ஆண்டனி போன்ற படங்களும் ஒரு விதமான டைம் லூப் ஜானரில் தான் உருவாகி உள்ளது.

Archana

Recent Posts

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

2 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

19 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

38 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

49 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

1 மணத்தியாலம் ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

1 மணத்தியாலம் ago