Categories: சினிமா

அப்போவே ஒரு கோடி சம்பளம் வாங்கிய ராமராஜன்.. பீல்டு அவுட் ஆனதற்கு இது தான் காரணமா..? அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட ஜெயலலிதா..

Spread the love

கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு இணையாக இருந்த மற்றொரு பெரிய ஹீரோ என்றால் அது நடிகர் ராமராஜன்தான். அவரை கிராமத்து நாயகன் என்று அழைத்தாலும், நகரவாசிகளுக்கும் அவரது படங்களை ரசிக்க பிடிக்கும். கங்கை அமரன் இயக்கம், இளையராஜா இசை, ராமராஜன் ஹீரோ, கவுண்டமணி, செந்தில் காமெடி என்றால் அந்த படம் 100 நாட்கள் ஓடும் என்பது அந்த காலகட்டத்தில் எழுதப்படாத சட்டமாக இருந்தது. அதை ராமராஜன் படங்கள் நிரூபித்து காட்டியது.

கரகாட்டக்காரன் பட வெற்றி விழாவில் பேசிய கமல்ஹாசன், நான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கஷ்டப்பட்டு அப்பு கேரக்டரில் குள்ளமாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றேன். ஆனால் தலையில் ஒரு கரகத்தை வைத்து ஆடி அதைவிட அதிக பாராட்டை ராமராஜன் பெற்றுவிட்டார் என பாராட்டி இருந்தார். அப்படி பெயருடன், புகழுடன் சினிமாவில் இருந்த ராமராஜன், அதிமுகவில் இணைந்து ஜெயலலிதாவின் அன்புக்குரிய தொண்டரானார். அதனால் எம்பி ஆனார். அதிமுக தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துக்கொண்டு பிரசாரம் செய்தார். குறிப்பாக திமுக கட்சிக்காரர்களை கடுமையாக தாக்கிப் பேசினார்.

அப்படி ஒரு முறை தேர்தல் பிரசாரத்தில் கலந்துவிட்டு காரில் மதுரைக்கு திரும்பிய போது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஓட்டிவந்த டிரைவர் உயிரிழந்தார். இதில் பலத்த காயமடைந்த ராமராஜன், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அப்போது அமைச்சர்கள் செங்கோட்டையன், ஓபிஎஸ்சை அழைத்த ஜெயலலிதா, ராமராஜன் இருக்கும் இடத்தில் நான் இருந்தால் என்ன செய்வீர்களோ, அப்படி செய்து ராமராஜனை காப்பாற்றுங்கள் என உத்தரவிட்டார்.

பதறியடித்த அவர்கள் இருவரும் சென்று, கோமா ஸ்டேஜில் இருந்த ராமராஜனை பெரிய மருத்துவமனையில் சேர்த்து, பெரிய டாக்டர்களை வரவழைத்து அவரது உயிரை காப்பாற்றினர். எனினும் இந்த விபத்தால் பழைய அழகை, தோற்றத்தை, முகவடிவை இழந்த ராமராஜன் அதற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு பின் அவர் நடித்த ஓரிரு படங்களும் பெரிய அளவில் பேசப்படவில்லை என, சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

admin

Recent Posts

பெங்களூர் காப்பகத்தில் பயங்கரம்… கழிப்பறையை கண்டாலே அலறும் 2 வயது குழந்தை… வீடியோவில் சிக்கிய கொடூரம்…!

பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…

54 seconds ago

தவெக-வில் இருந்து வந்த செம ஆஃபர்…. அதிமுகவில் இருந்து விலகும் Ex அமைச்சர் வளர்மதி?…. சலசலப்பை அடக்கிய அப்சரா ரெட்டியின் ட்வீட்…!

முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…

6 minutes ago

என்னது,…”அவங்க மூணு பேரும் கூட இருக்கணுமா ?…” யாருமே எதிர்பார்க்காத டிரம்பின் அந்த ‘ஒரே ஒரு’ ஆசை…!

அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…

12 minutes ago

திமுக கோட்டை தகர்ந்தது.. மெகா சதி திட்டம்… கோட்டையில் அரங்கேறிய ரகசியம்.. தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேசிய அந்த ‘மூளைச்சலவை’ டீம் யார்?… வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும்…

22 minutes ago

நடுவழியில் உயிருக்கு துடித்த இளம்பெண்… டிரைவர், கண்டக்டர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… புதுச்சேரியையே உருகவைத்த நெகிழ்ச்சி சம்பவம்… குவியம் பாராட்டுக்கள்…!

புதுச்சேரியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்ணை, சமயோசிதமாகச் செயல்பட்டு அரசுப் பேருந்தையே ஆம்புலன்ஸாக…

25 minutes ago

“அமைச்சர் பதவிக்கு தகுதி இருக்கா?”… “அழுகினி நாடகம் ஆடுறாங்க”… தவெக அமைச்சரை வெளுத்து வாங்கிய திமுக… தூள் பறக்கும் ட்விட்டர் வார்…!

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள்…

37 minutes ago