நடுவழியில் உயிருக்கு துடித்த இளம்பெண்… டிரைவர், கண்டக்டர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… புதுச்சேரியையே உருகவைத்த நெகிழ்ச்சி சம்பவம்… குவியம் பாராட்டுக்கள்…!

Spread the love

புதுச்சேரியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்ணை, சமயோசிதமாகச் செயல்பட்டு அரசுப் பேருந்தையே ஆம்புலன்ஸாக மாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிர் காத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் மனிதநேயச் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா (30) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் புதுச்சேரி நோக்கி அரசுப் பேருந்தில் பயணித்தபோது, டோல்கேட் அருகே அவருக்குக் கடுமையான வலிப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்துக்குள் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நடத்துநர், ஆம்புலன்ஸ் வரக் காத்திருந்தால் காலதாமதமாகிவிடும் என்பதை உணர்ந்து, ஓட்டுநரிடம் நிலைமையை விளக்கியுள்ளார். சிறிதும் தாமதிக்காத ஓட்டுநரும், சக பயணிகளின் முழு ஒத்துழைப்போடு பேருந்தை அதிவேகமாக இயக்கி, நேரடியாகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவு நுழைவு வாயிலுக்கே கொண்டு சென்று நிறுத்தினார்.

மருத்துவமனை வாசலில் பேருந்து நின்றதும், நடத்துநர் மற்றும் பயணிகளின் உதவியோடு ஐஸ்வர்யா உடனடியாக மீட்கப்பட்டு அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதால், அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். நெருக்கடியான நேரத்தில் மாற்றுச் சிந்தனையின்றி, சாதுரியமாகச் செயல்பட்டு ஓர் இளம்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் இந்த உன்னதமான சேவையைப் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளுடன் பாராட்டி வருகின்றனர்.

Visaka

Recent Posts

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

11 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

28 minutes ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

41 minutes ago

பெங்களூர் காப்பகத்தில் பயங்கரம்… கழிப்பறையை கண்டாலே அலறும் 2 வயது குழந்தை… வீடியோவில் சிக்கிய கொடூரம்…!

பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…

53 minutes ago

தவெக-வில் இருந்து வந்த செம ஆஃபர்…. அதிமுகவில் இருந்து விலகும் Ex அமைச்சர் வளர்மதி?…. சலசலப்பை அடக்கிய அப்சரா ரெட்டியின் ட்வீட்…!

முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…

58 minutes ago

என்னது,…”அவங்க மூணு பேரும் கூட இருக்கணுமா ?…” யாருமே எதிர்பார்க்காத டிரம்பின் அந்த ‘ஒரே ஒரு’ ஆசை…!

அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…

1 மணத்தியாலம் ago