அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

Spread the love

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று துர்நாற்றத்துடன் மிதப்பதாக மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த மூட்டையை மீட்டுப் பிரித்துப் பார்த்தபோது, அதில் வாலிபர் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு, அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இது குறித்து டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்த நபர் மேச்சேரி சாம்ராஜ்பேட்டையைச் சேர்ந்த சேட்டு (45) என்பதும், அவர் கேரளாவில் உள்ள பேக்கரி ஒன்றில் முறுக்கு சுடும் மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் அடுத்தகட்ட விசாரணையில் இந்த கொலையின் பின்னணியில் இருந்த திடுக்கிடும் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. கொலை செய்யப்பட்ட சேட்டுவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி (50) என்ற பெண்ணிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக ஜோதி, சேட்டுவுடனான பழக்கத்தைக் குறைத்துக் கொண்டு, கூனாண்டியூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்ற சேகர் (42) என்பவருடன் புதிய கள்ளத்தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேட்டு, சேகருடனான தொடர்பைக் கைவிடுமாறு ஜோதியைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த ஜோதி, தனது புதிய கள்ளக்காதலன் சேகருடன் சேர்ந்து சேட்டுவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, திட்டமிட்டபடி சேட்டுவை வீட்டிற்கு வரவழைத்த ஜோதியும் சேகரும், அவரது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை மறைப்பதற்காகச் சடலத்தைப் பிளாஸ்டிக் சாக்கு பையில் கட்டி, வீடு மாற்றுவதற்காக வாகனம் தேவைப்படுவதாகக் கூறி, அஜீத் (49) என்பவரது வாகனத்தில் ஏற்றி யாருக்கும் தெரியாமல் காவிரி ஆற்றில் வீசியுள்ளனர். இந்த அதிர்ச்சித் தகவல்கள் விசாரணையில் அம்பலமானதை அடுத்து, கொலைக்குக் காரணமான ஜோதி, அவரது கள்ளக்காதலன் சேகர் மற்றும் உடந்தையாக இருந்த வாகன ஓட்டுநர் அஜீத் ஆகிய மூன்று பேரையும் மேச்சேரி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SATHISH R

Recent Posts

BREAKING: செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்…. தவெக ஆட்சிக்கவிழ்ப்பு வழக்கில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

5 minutes ago

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

10 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

27 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

46 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

57 minutes ago

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

1 மணத்தியாலம் ago