Categories: சினிமா

அஜீத் தான் எனக்கு பர்ஸ்ட், அப்றம் தான் சூர்யா.. அஜித் குடும்பமும் எங்க குடும்பமும்.. அஜித் குறித்த சீக்ரெட்டை சொன்ன நடிகை ஜோதிகா..

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகை ஜோதிகாவுக்கு ஸ்பெஷல் இடம் எப்போதும் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த படத்தில், அவரது கேரக்டர் பெயர் வைக்காமல் ஜோதிகா கேரக்டர் பெயர் வைத்து எடுக்கப்பட்ட படம்தான் சந்திரமுகி. கமல், விஜய், அஜீத், சூர்யா, மாதவன் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் காதல் தி கோர் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பரவலாக பாராட்டை பெற்றுள்ளது. சூர்யா திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து செலக்டிவ் கேரக்டரில் மட்டுமே மிக குறைவான படங்களில் ஜோதிகா நடிக்கிறார். இப்போது சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் மும்பையில் குடியேறிவிட்டனர். இந்தி படத்தில் நடிக்க சூர்யா கமிட் ஆகியிருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகை ஜோதிகா பேசியதாவது, இப்போது நான் அம்மா நடிகையாக மாறிவிட்டேன். எமோஷனல் காட்சிகளில் முதலில் நடிப்பது வேறு மாதிரி இருந்தது. இப்போது, ஷாட்களுக்கு இடையே 10 நிமிடங்களுக்கு ஒருமுறை போன் பார்ப்பது என் பழக்கமாகி விட்டது. வீட்டில் இருந்து ஏதேனும் முக்கிய மெசேஜ் இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். அப்படி பார்த்தால், பால் பணம் கட்ட வேண்டும். பள்ளியில் குழந்தைகள் காத்திருக்கின்றனர் போன்ற தகவல்கள் வரும். இதை படித்துவிட்டு அந்த நேரத்தில் இடையிடையே போய் நடித்து வருகிறேன். அதனால், அப்பப்போது தோன்றுகிற உணர்ச்சிகளை காட்டி நடித்துவிடுகிறோம். அதில் எமோஷனல் காட்சிகள் என்றெல்லாம் சிறப்பு கவனம் காட்டுவதில்லை.

அஜீத்குமார் ஒரு இனிமையான மனிதர். சிறந்த பண்பாளர். அவருடன் பூவெல்லாம் உன்வாசம் படத்தில் ஜோடியாக நடித்து நல்ல அனுபவமாக இருந்தது. சூர்யாவுடன் நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படம்தான் என் முதல் படம். அதற்கு பிறகுதான் வாலி படத்தில் அஜீத்துடன் நடித்தேன். ஆனால் முதலில் ரிலீஸ் ஆனது வாலிதான். அந்த வகையில் என்னுடைய முதல் ஹீரோ அஜீத்குமார் தான். சூர்யாவுடன் நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் பிறகுதான் ரிலீஸ் ஆனது. அந்த வகையில் அஜீத்குமார் தான் என்னுடைய பர்ஸ்ட் ஹீரோ.

அஜீத்குமார் குடும்பமும், எங்களும் குடும்பமும் மிகவும் நெருக்கமானது. இதற்கு முக்கிய காரணம் அஜீத்குமாருக்கு இந்தி தெரியும். நன்றாக இந்தி பேசுவார். ஆனால் எனக்கு அப்போது தமிழ் தெரியாது. அதனால் இந்தியில் அவருடன் பேசியதால் விரைவில் எளிதாக பழக முடிந்தது. இருவரும் நல்ல நண்பர்கள் ஆனோம். எங்கள் அப்பா, அம்மா, அஜீத்குமார் அப்பா, அம்மா எல்லாரும் நல்ல நண்பர்களாக பழகினார்கள். இப்போதும் அந்த நட்பு இருக்கிறது. அந்த வகையில் சூர்யாவுடன் முதல் படத்தில் நடித்த வகையில் பர்ஸ்ட் ஹீரோ அவர்தான். ஆனால், படம் ரிலீஸ் ஆன வகையில் அஜீத்குமார் தான் என் பர்ஸ்ட் ஹீரோ என்று கூறியிருக்கிறார் நடிகை ஜோதிகா.

admin

Recent Posts

இளைஞர்களே… இனி வேலை தேடி அலைய வேண்டாம்… மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

10 minutes ago

ஷாக்.. இனிமே டெலிகிராமில் படம் டவுன்லோடு பண்ண முடியாது…! ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு… சினிமா ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி…!!

டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…

30 minutes ago

“அடேங்கப்பா… 10,000 கேமராக்களுடன் களமிறங்கிய அஸ்வினி பிடே – மும்பையை நடுங்க வைக்கும் ரெட் அலர்ட்… பதறவைக்கும் LIVE காட்சிகள்…!!”

மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…

37 minutes ago

“அட கடவுளே… மரண பயம் காட்டும் அரசு ICU வார்டு… நோயாளிகள் தலைக்கு மேல் கொட்டும் மழைநீர்… மின்கசிவு அபாயத்தில் தவிக்கும் நோயாளிகள்…!”

மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…

45 minutes ago

நாடே அதிர்ச்சி… பள்ளிக்குள்ளேயே கதறிய 13 வயது சிறுமி… 5 சிறுவர்கள் செய்த காரியம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…

46 minutes ago

BREAKING: பிரதமர் மோடியை கொலை செய்வோம்… சற்றுமுன் பரபரப்பு…!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும்…

46 minutes ago