arthi

வாழ்வின் உயரத்தை அடைய ‘உயரம்’ ஒரு தடையல்ல.. ஐஏஎஸ் ஆக சாதித்த ஆர்த்தி டோக்ரா.. தன்னம்பிக்கையின் அடையாளம்

By John on ஜனவரி 27, 2024

Spread the love

தன்னுடைய குறைகளையே நிறையாக மாற்றி மாற்றுத் திறனாளிகளும் உலகை மாற்றப் பிறந்தவர்கள் தான் என்று வெறி கொண்டு படித்து இன்று வெற்றி என்னும் இமாலய உயரத்தை தனது குள்ளமான உயரத்தால் துரத்திப் பிடித்து தன்னம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறார் ஆர்த்தி டோக்ரா என்ற ஐஏஎஸ் அதிகாரி.

ஆர்த்தி டோக்ரா வாழ்க்கையே ஒரு மிராக்கிள்தான். தந்தை, ராணுவத்தில் பணிரிந்தார். தாயார், பள்ளி ஆசிரியை. 1979-ம் ஆண்டு பிறந்த ஆர்த்திக்கு, வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இல்லை. பெற்றோர் கவலைப்பட்டார்கள். மிகவும் குள்ளமான உருவம்கொண்டிருந்தார். உறவினர்கள், `இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று ஆர்த்தியின் பெற்றோரை வற்புறுத்தினார்கள். `இனிமேல் எங்களுக்கு வேறு குழந்தை வேண்டாம். ஆர்த்திதான் எங்கள் உலகம்’ என்று சிரித்தவாறே பதிலளித்துவிடுவார்கள் ஆர்த்தியின் பாசமிகு பெற்றோர்.

   
arthi 2

#image_title

   

டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பொருளியல் பட்டம் பெற்ற ஆர்த்தி, முதுகலைப் படிப்புக்காக டேராடூன் சென்றார். அங்கே ஐ.ஏ.எஸ் அதிகாரியான மனிஷாவைச் சந்தித்தார். அதுவரை ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஆர்த்தியிடம் கிடையாது. ஆர்த்திக்குள் ஒளிந்திருந்த திறமைகளை அடையாளம் கண்டுகொண்ட மனிஷா, ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது, `நீங்கள் ஏன் ஐ.ஏ.எஸ் படிக்கக் கூடாது?’ எனக் கேட்டார்.

 

இந்தக் கேள்விதான் ஆர்த்தியின் வாழ்க்கைப் பயணத்தை மாற்றியது. ஆட்சியருக்குத் தேவையான கம்பீரம், தோரணை குறித்தெல்லாம் ஆர்த்தி யோசிக்கவேயில்லை. யூ.பி.எஸ்.சி தேர்வுக்கு, தன்னை தயார்ப்படுத்த ஆரம்பித்தார். 2006-ம் ஆண்டு முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவும் உயர்ந்தார்.

குழந்தைப் பாடலா? கூப்பிடுங்கப்பா இவர.. அச்சு அசல் குழந்தை போலவே பாடி பல ஹிட்களைக் கொடுத்த பாடகி ராஜேஸ்வரி..

பல முக்கியப் பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியுள்ளார் இவர். ஜோத்பூர் மாவட்ட ஆட்சியராக சிறப்பாக செயல்பட்டார் ஆர்த்தி.மேலும் இவர் பல்வேறு முக்கியப் பதவிகள் வகித்தவர். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலின்போது அஜ்மீரில் மாவட்ட தேர்தல் ஆணையராக சிறப்பாக பணியாற்றியதற்காக 2019-ம் ஆண்டு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோரிடம் தேசிய விருது பெற்றார் ஆர்த்தி.

arthi 1

#image_title

ஐஏஎஸ் அதிகாரியான ஆர்த்தி, தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில் வாக்களிக்க ஊக்குவித்தார். மாற்றுத்திறனாளிகள் வாக்குச் சாவடிகளுக்கு செல்ல உதவும் வகையில் வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் குறைந்தபட்சமாக இரண்டு சக்கர நாற்காலிகள் என்ற வீதத்தில் 874 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்தார். கிட்டத்தட்ட 17,000 மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பதற்கு இவரது ஏற்பாடுகளே முக்கியக் காரணம், என பலரால் பாராட்டப்பட்டார். உண்மையாகவே ஆர்த்தி டோக்ராவின் வாழ்க்கை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயேமே இல்லை.

#image_title