குழந்தைப் பாடலா? கூப்பிடுங்கப்பா இவர.. அச்சு அசல் குழந்தை போலவே பாடி பல ஹிட்களைக் கொடுத்த இந்த பாடகி.. யார் தெரியுமா..?

By John

Updated on:

ms rajeswari

மழலை மொழியில் பாடல்களைக் கேட்டாலே மனதில் இனம் புரியாத ஓர் சந்தோஷம் ஏற்படும். சினிமாவில் குழந்தைகள் பாடும் பாடல்களில் மழலைக் குரலில் சில பாடகர்களே பாடினார்கள். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில் அறிமுகமான கமலுக்கு அம்மாவும் நீயே அப்பாவும் நீயே.. என்று மனம் உருகி முருகா என அழைத்த குரலுக்குச் சொந்தக்காரர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

Kamal
kamal 1

அந்தப் பாடலின் வெற்றிக்குப் பின் இனி குழந்தைப் பாடல் என்றாலே கூப்பிடு எம்.எஸ்.ராஜேஸ்வரியை என்று அழைக்கும் அளவுக்கு சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்), அம்மாவும் நீயே அப்பாவும் நீயே (களத்தூர் கண்ணம்மா), காக்கா காக்கா மைகொண்டா (மகாதேவி) மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்), படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு (படிக்காத மேதை), சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி (குமுதம்), பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே ( செங்கமலத் தீவு), பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா (திக்குத் தெரியாத காட்டில்) போன்ற இன்றளவும் ரசிக்கக் கூடிய பாடல்களின் குரலுக்குச் சொந்தக்காரர்.

   
nayagan
nayagan

சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி படத்தில் இடம்பெற்ற ஓ ரசிக்கும் சீமானே பாடலால் சினிமா உலகை கவனிக்க வைத்தவர். இன்றளவும் இந்தப் பாட்டைக் கேட்டால் ரசிக்காத மக்களே இல்லை.

மேடையில் அனைவரின் முன்பும் ‘ரஜினிகாந்த் சங்கி இல்லை’ என்று கத்திய மகள்.. ஒரே பதிவில் ரஜினியின் சோலியை முடித்த ப்ளூ சட்டை மாறன்..

குழந்தைகளுக்காக மட்டும் தான் பாடுவாரோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் 1950-களில் பிரபல கதாநாயகிகள் பலருக்கும் பின்னணி பாடியவர். அதன் பின்னர் 1970-களின் இறுதிவரை புகழ்பெற்றிருந்த அவர் பின்னர் பட வாய்ப்புகளின்றி இருந்தார். 1989-ல் மணிரத்தினம் இயக்கிய ‘நாயகன்’ படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி இருவருக்கும் வாய்ப்புக்கொடுத்தார் இளையராஜா. அந்த படத்தில் அவர் பாடிய நான் சிரித்தால் தீபாவளி பாடல் அப்போது பிரபலமானது.

இசைஞானி இளையராஜா இசையில் ஸ்ரீதரின் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி எஸ்பிபியுடன் பாடிய அனைத்து கால இனிமைப் பாடல் ‘தலையைக் குனியும் தாமரையே’ என்ற பாடலை இன்றும் 80களின் ரசிகர்கள் எப்போது கேட்டாலும் கொண்டாடத் தவறியதில்லை.

author avatar