Connect with us

CINEMA

‘கைல ரூ.300 காசு இல்லாம, இரவை ரோட்டோரமா கழித்த விஜய் சேதுபதி படம் இயக்குனர்’.. அவரே பகிர்ந்த கசப்பான நினைவு..

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுபவர் தான் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது. அதிலும் குறிப்பாக இவர் இயக்கிய நீர்பறவை, கண்ணே கலைமானே, தர்மதுரை மற்றும் மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அடிதடி, கமர்ஷியல் சினிமாவுக்குள் சிக்கிக் கொள்ளாமல் மனித உணர்வுகளை பிரதானமாகி படங்களை இயக்குவதில் சீனு ராமசாமி ஆர்வம் உடையவர். இவர் இயக்கிய மாமனிதன் திரைப்படத்திற்கு கடந்த ஆண்டு தேசிய விருது கிடைத்தது.

   

அடுத்ததாக இவர் இயக்கத்தில் ஏவல் திரைப்படம் வெளியாக உள்ளது. அதே சமயம் ஆர். விஜய் கார்த்திக் இயக்கும் ஈக்வாலிட்டி என்ற திரைப்படத்தில் சீனு ராமசாமி நாயகனாக நடிக்க உள்ளார். இப்படி அவர் சினிமாவில் பிஸியாக இருக்க மறுப்பக்கம் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்த போது நடிகை மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமியின் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் இருந்த நிலையில் அந்த விவகாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இப்படியான நிலையில் சீனு ராமசாமி தான் வாழ்வில் சந்தித்த மிக துயரமான சம்பவத்தை பகிர்ந்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது பல வருடங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட தன்னிடம் பணம் இல்லை எனவும் தான் தங்கி இருந்த ஒரு வீட்டுக்கு 300 ரூபாய் வாடகை கொடுக்க முடியாமல் இரவு முழுவதும் சாலையோர மக்களுடன் இருந்ததாக ஒரு கசப்பான சம்பவத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அதை தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Andhimazhai இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@andhimazhai)

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top