#image_title
மிக்ஸாம் புயலின் தாக்கத்தால் சென்னை மாநகரம் முழுவதும் பெரிதளவு பாதிக்கப்பட்டிருந்தது. இதனை நாம் பார்த்திருந்தோம். இப்புயலின் தாக்கத்தினால் சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குமரி கடலில் ஏற்பட்ட வளிமண்டலம் மேலடுக்க சுழற்சியால் ஏற்பட்ட கனமழை தற்பொழுது திருநெல்வேலி, கன்னியாகுமரி ,தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது .
இதில் திருநெல்வேலி தூத்துக்குடி அதிக பாதிப்பு அடைந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை களத்தில் இறங்கி செய்து வருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். இயக்குனர் மாரி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சொந்த ஊரும் தற்பொழுது வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. அதனால் இவர் தற்போது நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு போன் செய்து இந்த பகுதியை வந்து தங்கள் கண்டிப்பாக பார்வையிட வேண்டும் என்று அழைப்பு விடுவிக்க அங்கு உதயநிதியும் வரைந்து வந்தார். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிகளும் வேகமாக தற்போது நடைபெற்று வருகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் களத்தில் இறங்கி உதவியது பலர் பாராட்டு வந்தாலும், உதயநிதியுடன் மாரி செல்வராஜ் இருப்பதை கடுமையாக விமர்சித்தும் வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர் மாரி செல்வராஜிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்காக நான் இயக்குனர் அல்ல. இது என் ஊர். என் மக்கள். இயக்குனரா இல்லைன்னா கூட இப்படித்தான் அலைந்து இருப்பேன். அது வேற. இது வேற. நான் முழுக்க முழுக்க என் ஊர் மக்களுக்காக தான் இங்க வந்து இருக்கேன்.என் அம்மாவை காணோம் .என் பிள்ளைகளை காணோம்னு ஒவ்வொருத்தரும் போன் பண்ணி அழுகிறாங்க. எல்லாரும் மாரி அண்ணன் கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறாங்கல்ல. அதுக்காக வேண்டி நம்ம ஏதாவது செய்யணும். எல்லாரும் போன் பண்ணி அண்ணே இப்படி காப்பாத்துங்கன்னு சொல்லும்போது அந்த வலியும் வேதனையும் அனுபவிச்சவங்களுக்கு தான் புரியும்’ என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து நிருபர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், உங்களையும் வைச்சு எழுந்த விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மாரி செல்வராஜ்’ நான் இங்க தான் இருந்தேன். நான் தான் அவரை போன் பண்ணி இங்க வாங்க சார் என்று சொன்னேன். என் கதறல கேட்டுத்தான் அவர் இங்கு வந்தார். இது என் ஊரு. என் மண்ணு. என் நிலம் . அவரு இங்க வந்து நிறைய விஷயங்களை பண்ணி கொடுத்தாரு. இதனால நிறைய மக்களை நாங்க மீட்டு இருக்கோம்.” என்று கூறியுள்ளார். தற்பொழுது அவரின் இந்த மீட்பு பணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…