#image_title
சோசியல் மீடியாக்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பிரபலம் அடைவதற்கு 2K கிட்ஸ் தான் மிக முக்கிய காரணம். தற்பொழுது 2K கிட்ஸ்களின் பேவரட்டாக இருப்பவர் அமலா ஷாஜி. பிரபல நடிகைகளை விட சோசியல் மீடியாவில் அதிக பாலோவர்ஸ் வைத்து இருக்கிறார் அமலா ஷாஜி. தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகைகளை விட சமூக வலைதளத்தில் அமலா ஷாஜியை தான் ரசிகர்கள் அதிகம் பாலோ செய்கிறார்கள்.
பிரியங்கா மோகன் மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா மேனன், அதுல்யா ரவி என பல நடிகைகளை விட இன்ஸ்டாவில் அமலா ஷாஜியை ரசிகர்கள் அதிகம் பாலோ செய்கிறார்கள்.அதற்கு காரணம் இவருடைய கியூட்னஸ் ஓவர்லோடு தான். இவர் கேரளாவை சேர்ந்தவர். டிக் டாக்கின் மூலம் அமலா ஷாஜி மக்கள் மத்தியில் அறிமுகமானார். ஆனால், டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் இவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டார். தற்போது இவரை மில்லியன் கணக்கான பாலோவர்ஸ் பாலோ செய்கிறார்கள்.
தற்பொழுது பாடலாசிரியர் பிரியன் அமலா ஷாஜி குறித்து கூறிய விஷயம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் ஆண்டனி இசையில் வெளியான பல ஹிட் பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதிய பிரியன் ஹீரோவாகவும் இயக்குநராகவும் அறிமுகமாக உள்ள திரைப்படம் ‘அரணம்’. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அதில், மேடை ஏறி பேசிய பிரியன் ‘2 நிமிஷ பாடலுக்கு நடனமாட சென்னையில் ஒரு பொண்ணு 50 ஆயிரம் கேட்குது. வெறும் 30 செகண்ட் நடனமாட கேரளா பொண்ணு 2 லட்சம் மற்றும் ஃபிளைட் டிக்கெட் எல்லாம் கேட்குது’ என கூறினார். அந்த பெண்ணின் பெயரை சொல்லச் சொல்லி ‘திரெளபதி’ பட இயக்குநர் மோகன் ஜி சொல்ல, உடனே பிரியன் ‘வேற யாரு நம்ம அமலா ஷாஜி தான் ‘என கூறினார். தற்பொழுது அவரின் இந்த பேச்சுக்கு பலர் கண்டங்களையும், ஒரு சிலர் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் 'கில்லர்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சி படப்பிடிப்பு நள்ளிரவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது,…
தமிழகத்தில் இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 06, 2026)…
புதுச்சேரி திலகர் நகரைச் சேர்ந்த பியூடிஷனான ராஜமாதங்கி (25) என்பவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் சரவணன்…
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதியன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன. அன்றைய தினம்,…
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக)…
அண்ணாமலை தனி கட்சி தொடங்கியதால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித பின்னடைவும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலச் செயலாளர்…